Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜூலை, 2020

2-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 மனிதனாகப் பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை தரக்கூடிய அளவுக்கு கேதுவிற்கு சக்தி உண்டு. உலகில் யாருக்கும் புலப்படாத பிரபஞ்ச ரகசியங்கள் புலப்படுவதற்கும் கேதுவே காரணம். ஒருவர் ஈடுபட்டுள்ள துறைகளில் முதன்மை ஞானத்தை பெறக்கூடிய சக்தியை தருபவர் கேதுவே.

ஒருவரது ஜாதகத்தில் கேது யோகம் தரக்கூடிய இடத்தில் இருந்தால், பல நன்மைகள் உண்டாகும். உடலை பார்த்தவுடன் நோய்களை பற்றி கூறும் வித்தக கலையும், முகத்தை பார்த்த உடனே எதிர்கால கணிப்புகளை பற்றி கூறும் கலையையும் தருபவர் கேது பகவான்தான்.

ஒருவருக்கு வேலை கிடைப்பது, வேலை பறிபோவது, வாழ்க்கையை தலைகீழாக்கும் நல்லதும், கெட்டதுமான மாற்றங்கள் போன்றவற்றை கேதுதான் தருவார்.

லக்னத்திற்கு 2-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு எடுக்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.

2-ல் கேது இருந்தால் என்ன பலன்? 


👉 எதையாவது பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

👉 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

👉 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

👉 பிறர் பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

👉 முன்கோபம் உடையவர்கள்.

👉 பொருளாதார பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

👉 வாக்குவன்மை உடையவர்கள்.

👉 மற்றவர்களின் பிழைகளை கண்டறிவதில் வல்லவர்கள்.

👉 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக