Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜூலை, 2020

மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிவரம்.!



6.7-இன்ச் எப்எச்டி பிளஸ்


மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி 5ஜி பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றிய தகவலை வெளியிடவில்லை. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
1080 × 2520 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9 என்ற திரைவிகதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
புதிய மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765 7என்எம் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் +5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி+ 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 20வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
5 ஜி, 4 ஜி, வோல்டிஇ, வைஃபை 6 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிஹெர்ட்ஸ்), புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ,என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி 5ஜி பிளஸ் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,495-ஆக உள்ளது.6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,715-ஆக உள்ளது.
விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!