பேஸ்புக்
நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான்
கூறவேண்டும். குறிப்பாக பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான
பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம். தற்சமயம் இந்நிறுவனம்
சார்பில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது
பேஸ்புக் மெசஞ்சரை வாட்ஸ்அப் உடன் இணைத்து ஒன்றாக மாற்றும் திட்டம் பற்றி
பரீசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பேஸ்புக் நிறுவனம்
தன்னுடைய கிளை நிறுவனமாக சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்-ஐ தன்னுடன் இணைத்துக்
கொண்டது.
இந்த
நிலையில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்ஜரை போன்றவற்றை
ஒன்றாக்கி மூன்று ஆப்களின் தொடர்புகளுடன் சாட்யும் நிர்வகிக்க முடியும். வசதியை
உருவாக்கவுள்ளது.
கடந்த
2019-ம் வருடம் இதுபற்றி வாய்திறந்த மார்க் ஸ்க்கர் பர்க், பின்னாளில், இந்த
திட்டம் உண்மைதான் என்று கூறினார்,அதேசமயம் இதை செயல்படுத்துவதற்கு இந்த ஆண்டு
முழுவதற்கும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகிறது. இந்து புதியவசதி வந்தால்
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் தொடர்புகளை ஒரு பயனாளர் ஒரு நேரத்தில்
நிர்வகிக்க முடியும்.
ஒரு
உதாரணம் கூறவேண்டும் என்றால், வாடஸ்அப்-ல் ஒருவரை பிளாக் செய்திருந்தால். அதே
பயனாளருக்கு உரிய மெசஞ்சர் ஆப்பிலும், அதே நபரை காட்டுவதில்லை. அதுமட்டுமில்லாமல்,
இதில் வாட்ஸ்அப் நம்பர் மட்டுமே இருக்கும் ஒரு பயனாளார் இன்ஸ்டாகிராம் மட்டுமே
உடைய இன்னொரு பயனாளிரடம் சாட் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்கள் நிகழ்த்திக் கொள்ள
முடியும். இதனால் வாட்ஸ்அப் இல்லாத ஒரு தொடர்பாளர், வாட்ஸ்அப் உடைய ஒருவரிடம் பேச
முடியும் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக