Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூலை, 2020

நிஜ உலகில் டைனோசர்களைப் பார்க்க, கூகிள் கையில் எடுத்த புதிய வழி! கற்பனைக்கும் எட்டாத முயற்சி.!

நிஜ வாழ்க்கையில் டைனோசர் பார்க்கலாம்
பூமியில் மனிதர்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த மிகப்பெரிய இராட்சச உருவம் கொண்ட உயிரினம் தான் டைனோசர்கள். இவற்றை நாம் யாரும் நேரில் கண்டதில்லை, இவை எப்படி இருக்கும்? என்ன உருவத்தில் இருக்கும்? இவற்றில் சாதுவானது எது? வேட்டையாடும் கொடூர குணம் கொண்ட டைனோசர் எது என்று பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே வெளி உலகத்திற்கு டைனோசர் பற்றிய தகவல்கள் தெரியவந்தது.
நிஜ வாழ்க்கையில் டைனோசர் பார்க்கலாம்
இன்னும் சொல்லப் போனால் ஜுராசிக் பார்க் என்ற திரைப்படத்தின் மூலம் தான் டைனோசர் பற்றி அறிந்தவர்கள் ஏராளம். இப்படி இருக்கும் டைனோசர்களை நீங்கள் இப்பொழுது நிஜ வாழ்க்கையில் பார்க்கலாம் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஆம், அப்படியான ஒரு வசதியைத் தான் கூகிள் நிறுவனம் தற்பொழுது செய்துள்ளது. கூகிள் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் உள்ள இடத்திலேயே டைனோசர்களை பார்க்கலாம்.
ஆக்மென்டட் ரியாலிட்டி டைனோசர்கள்  
கூகிள் நிறுவனம் தனது கூகிள் தேடலில் 10 ஆக்மென்டட் ரியாலிட்டி(augmented reality) டைனோசர்களைச் சேர்த்துள்ளது, அதாவது மெய்நிகர் விர்ச்சுவல் டைனோசர்களை வடிவமைத்து உருவாகியுள்ளது. அடுத்த முறை நீங்கள் பிராச்சியோசரஸ் (Brachiosaurus) அல்லது ஸ்டெரானோடன் (Pteranodon) போன்ற டைனோசர்கள் பற்றிய தகவலை அறிய விரும்பினால், நிஜ வாழ்க்கையில் இந்த உயிரினங்கள் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை இனி 3D வடிவத்தில் பார்க்கலாம். 
ஜுராசிக் வேர்ல்ட் அலைவ் ஆக்மென்ட் ரியாலிட்டி மொபைல் கேம்  
கடந்த ஆண்டு கூகிள் I/O தேடல்களில் ஆக்மென்டட் ரியாலிட்டி விலங்குகளைச் சேர்க்கத் தொடங்கியது, அதன் பின்னர் பூனைகள், தேள், கரடிகள், புலிகள் மற்றும் வாத்து போன்ற பல பறவைகள் மற்றும் விலங்குகளை 3D வடிவில் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது, 10 வகையான ​​டைனோசர்களை அதன் பட்டியலில் சேர்த்துள்ளது. ஜுராசிக் வேர்ல்ட் அலைவ் ஆக்மென்ட் ரியாலிட்டி மொபைல் கேம்மிற்காக இவை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
10 வகையான டைனோசர்களின் பட்டியல்  
டைரனோசொரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex), வெலோசிராப்டர் (Velociraptor), ட்ரைசெராடாப்ஸ் (Triceratops), ஸ்பினோசொரஸ் (Spinosaurus), ஸ்டீகோசொரஸ் (Stegosaurus), பிராச்சியோசரஸ் (Brachiosaurus), அன்கிலோசொரஸ் (Ankylosaurus), திலோபோசொரஸ் (Dilophosaurus), ஸ்டெரானோடான் (Pteranodon) மற்றும் பராசரோலோபஸ் (Parasaurolophus) என 10 வகையான டைனோசர்களின் உருவங்களை தற்பொழுது கூகிள் சேர்த்துள்ளது. 
இனி நீங்கள் இருக்கும் இடத்திற்கே டைனோசர்கள் வரும் 
உங்கள் கேமரா மூலம் இந்த டைனோசர்களை நீங்கள் உங்கள் இருப்பிடத்திற்கே கொண்டு வரமுடியும். டைனோசர் 3D படத்திற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள View in your space கிளிக் செய்தால் உங்கள் கேமரா திறக்கப்பட்டு நீங்கள் கேமரா மூலம் பார்க்கும் இடத்தில் இந்த டைனோசர்கள் நிஜமாக இருப்பது போலக் காட்சியளிக்கும். இடத்திற்கு ஏற்றார் போலக் கூகிளின் AR ஸ்கேலிங் தொழில்நுட்பம் அவற்றின் உருவத்தைப் பெரிதாக்கிக் காண்பிக்கிறது. 
எப்படி இதை உங்களை போனில் பயன்படுத்துவது? 
உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கும் இதை நீங்கள் காண்பிக்கலாம். அவர்களின் அருகில் டைனோசர் நிற்பது போன்று புகைப்படத்தையும் நீங்கள் கிளிக் செய்யலாம். 
உங்களுடைய கூகிள் கிறோம் அல்லது கூகிள் பயன்பாட்டை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
இப்பொழுது உங்களுடைய கூகிள் சர்ச் டேப்பிறகு சென்று dinosaur என்று டிபே செய்யுங்கள். 
உங்களுக்கான டைனனோசர் தகவல் இப்பொழுது காண்பிக்கப்படும். 
வைரல் ஆகும் டைனோசர்கள் 
கீழே ஸ்க்ரோல் செய்தால் 3D வடிவிலான T-rex டைனோசர் காண்பிக்கப்படும். 
படத்தில் இருக்கும் View in 3D விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். 
அடுத்து உங்கள் கேமரா மூலம் நீங்கள் இருக்கும் இடத்தில் டைனோசரை பார்க்க View in your space கிளிக் செய்யுங்கள். 
இதேபோல், கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வகையான டைனோசர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். 
தற்பொழுது உலகத்தில் உள்ள பலரும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். வைரலில் உள்ள இந்த அம்சத்தை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக