Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூலை, 2020

பப்ஜி மொபைல் BAN செய்யப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்!

Alternative for PUBG Mobile
ஒருவேளை இந்தியாவில் தடை செய்யப்பட்டால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய PUBG மொபைல் கேமிற்கான தரமான மாற்று கேம் ஆப்களின் பட்டியல் இதோ...
பப்ஜி மொபைல் என்பது இந்தியாவின் மிகவும் பிரபலமான பேட்டில்-ராயல் கேம்களில் ஒன்றாகும். இந்தியாவில் இந்த கேமை பற்றி கேள்விப்படாதவர்களே இல்லை எனலாம், அப்படிப்பட்ட பிரபலத்தன்மையிற் கொண்ட இந்த கேம் நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம்களிலும் ஒன்றாகும். எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது - சீன ஆப்களை இந்தியா தடை செய்யும் வரையிலாக.

சமீபத்தில் தடை செய்யப்பட்ட 59 சீன ஆப்களை தொடர்ந்து பப்ஜி மொபைலும் தடை செய்யப்படுமா என்கிற அச்சம், கேள்வி மற்றும் குழப்பம் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளது. தற்போது வரையிலாக பப்ஜி மொபைல் கேமிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டு பப்ஜி பிரியர்கள், இதுவும் தடை செய்யப்படுமா என்று கூகுளில் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதற்கு பதில் - இப்போதைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்காலம். எனவே பிரபலமான PUBG மொபைல் கேமிற்கு சரியான மாற்று கேம்களை பற்றி அறிந்து வைத்து கொள்வது நல்லது, அல்லது இப்போதே இவைகளை விளையாட பழகிக்கொள்வதும் நல்லது தான்.

ஃபோர்ட்நைட் (Fortnite)

ஃபோர்ட்நைட் மற்றும் பப்ஜிக்கு தொடக்கத்திலிருந்தே போட்டி நடந்து வருகிறது. இந்த இரண்டு கேம்களும் பேட்டில் ராயல் வகையை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் இவை இரண்டுமே வலுவான பயனர் தளத்தையும் கொண்டுள்ளன. இதுவே ஃபோர்ட்நைட் கேம் ஆனது PUBG மொபைலுக்கு சரியான மாற்றாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த ஆப் Android மற்றும் iOS இரண்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. PUBG மொபைலைப் போலன்றி, ஃபோர்ட்நைட் கேமின் கிராபிக்ஸ் மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் பயனர்கள் விளையாட வெவ்வேறு கேரக்டர்களும் உள்ளன.

கால் ஆஃப் டூட்டி: மொபைல் (Call of Duty: Mobile)

கால் ஆஃப் டூட்டி: மொபைல், மற்றொரு பிரபலமான பேட்டில் -ராயல் கேம் ஆகும் மற்றும் PUBG மொபைலுக்கு ஒரு நல்ல மாற்றாகும். இந்த கேம் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது, இதில் பேட்டில் ராயல் மோட் உள்ளது, அங்கு 100 பேர் இறுதிவரை போராடுகிறார்கள். இருப்பினும், இந்த கேமின் மற்றொரு முக்கியமான சுவாரஸ்யம் என்னவென்றால், விளையாட்டின் போது நீங்கள் கேடயம் மற்றும் பல அம்சங்களைப் பயன்படுத்தலாம். மேலும், ஒரு போட்டியின் போது பயனர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தும் விருப்பமும் உள்ளது.


கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena Free Fire)

கரேனா ஃப்ரீ ஃபயர் என்பது PUBG மொபைலுக்கான அழகான மாற்றாகும். இந்த கேம் சில சுவாரஸ்யமான அம்சங்களை வழங்குகிறது. இந்த விளையாட்டின் சிறந்த பகுதி என்னவென்றால், இது மிகவும் குறுகிய மற்றும் மிருதுவான ஒரு கேம் ஆகும். ஒவ்வொரு போட்டிகளிலும், 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் 10 நிமிடங்களில் போட்டி முடிவடைகிறது, இது விரைவான போட்டிகளில் விளையாட விரும்புவோருக்கு நல்லது. வீரர்கள் அணிகளாகவும், தனியாகவும் கூட விளையாடலாம். இந்த கேம் மிதமான கிராபிக்ஸை வழங்கினாலும் கூட இது PUBG மொபைல் கேமிற்கான நல்ல மாற்றீடுகளில் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக