Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும்

480nits பிரைட்நஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 20:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜிபியு ஆதரவுகள் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு

கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4300எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பித்தக்கது.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில்ரூ. 16,510)ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!