Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு!

பிரதான சமூகவலைதளமான ட்விட்டர் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிந்தால் தங்களது வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வீட்டிலேயே நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

கொரோனா ஊரடங்கில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். அதில் பிரதான பொழுதுபோக்காக இருப்பது மொபைல் தான். அதிலும் சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பெரும்பாலானோரின் கோரிக்கை

320 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் வாசிகளில் பெரும்பாலானோரின் கோரிக்கை ட்வீட் செய்த பதிவை திருத்துவதுதான். இதுவரை ட்வீட் பகுதியில் (edit option) என்பது காட்டவில்லை. இதன்காரணமாக ட்விட்டரில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

edit option வசதி இல்லாத காரணத்தால் ட்விட்டரில் ட்விட் செய்யும் போது அதில் பிழை ஏற்பட்டால். அந்த ட்விட்டையே டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து எடிட் ஆப்ஷன் வழங்குமாறு ஏராளமானோர் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

தவறான தகவல் பரப்பும் வகையிலான அம்சம்

தவறான தகவல் பரப்புவதற்கு உதவும் வகையிலான இந்த அம்சத்தை ட்விட்டர் ஒருபோதும் சேர்க்காது என அதன் தலைமை நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சி கூறினார். இந்த நிலையில் ட்விட்டர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 அனைவரும் முகக்கவசம் அணிந்தால் வழங்குவோம்

ட்விட்டர் நிர்வாகத்தின் ஒரு பதிவு அனைவரையும் ஆர்வத்தோடு கவனிக்க வைத்துள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்தால் டுவிட்டர் எடிட் பட்டன் ஆப்ஷன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கொரோனா குறித்து விழிப்புணர்வு

கொரோனா பரவலைத் தடுக்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நேரத்தில் ட்விட்டர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக