Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

ஆக்ட் பைபர்நெட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! என்ன தெரியுமா?

ஆக்ட் பைபர்நெட் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிறுவனம் அதன் தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்கு திருத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி பெங்களூரு, டெல்லி,ஹைதராபாத் அல்லது சென்னையில் உள்ள ஆக்ட் பைபர்நெட் பயனராக இருந்தால், இந்த புதிய திட்டங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பிராட்பேண்ட் திட்டங்களின் இணைய வேகத்தை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, அந்த

திட்டங்கள் இப்போது அதிக டேட்டா பயன்பாடு மற்றும் புதிய நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பையும் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் விளம்பர திட்டம் என்று கூறப்படும் பிளாட்டினம் திட்டம் ஆனது 200Mbps வரை வேகத்தை வழங்குகிறது, அதேபோல் டயமண்ட் திட்டம் உங்களுக்கு 300Mbps அளவிலான வேகத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்நிறுவனம் திட்டங்களின் விலையை மாற்றவில்லை என்றும் இந்த புதிய மாற்றங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு பின்னர்,பிளாட்டினம் திட்டம் 1000ஜிபி அளவிலான டேட்டா 200எம்பிபிஎஸ் வேகத்திற்கு வழங்குகிறது.

குறிப்பிட்ட டேட்டா தீர்ந்த பின்னர் இணைய வேகம் 1எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் இந்த திட்டத்துடன் 1000ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவைவும் நீங்கள் பெறமுடியும்.

மேலும் டயமண்ட் திட்டத்தை பொறுத்தவரை 1,500ஜிபி அளவிலான டேட்டாவை 300எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் பெறுவீர்கள், கூடுதல் 1000ஜிபி சலுகையுடன் மொத்தம் 2500ஜிபி வரை நீங்கள் பெறலாம்.

இந்த திட்டங்களின் விலை முறையே ரூ.1,049 மற்றும் ரூ.1,349-ஆக உள்ளது. ஆக்ட் பைபர்நெட் சேவையின் கீழ் இந்தஇரண்டு திட்டங்களும் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகக்து, மீதமுள்ளவை அதே டேட்டா வேகம் மற்றும்டேட்டா பயன்பாட்டு வரம்புடன் வருகின்றன.

இதைப்பற்றி மேலும் தகவல் தெரியவேண்டும் என்றால் ஆக்ட் பைபர்நெட் வலைதளத்திற்குச் சென்று கூடுதல் விவரங்களைப் பெறலாம் அல்லது புதிய திட்டங்களுக்கு பதிவு செய்யலாம். பின்பு வீட்டில் இருந்து பணிபுரியும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிறுவனம் டேட்டா வேகத்தை திருத்தியுள்ளதாக தெரிகிறது.

அதிக டேட்டா பயன்பாட்டு வரம்புடன் 300Mbps என்கிற இணைய வேகத்தை வழங்குவதென்பது மக்கள் நிலையான இன்டர்நெட் கவரேஜை கவலை இல்லாமல் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இதன் மூலம் வீடியோ மீட்டிங்களில் கலந்துகொள்ள தடையற்ற இணையத்தை பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக