Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்ன தெரியுமா?

சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோவிற்கு பஞ்சமே இல்லை, தினம் தினம், புதிது புதிதாகப் பல அருமையான பதிவுகளும், சில நம்பமுடியாத விசித்திரமான பதிவுகளும் பதிவிடப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில் அண்மையில் சமூக வலைத்தளத்தையே ஒரு வீடியோ உலுக்கியது, நெட்டிசன்ஸ்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இந்த வீடியோ பின்னணியில் உள்ள உண்மையை ஆராய்ந்துள்ளோம்.

விசித்திரமான உயிரினத்தின் உருவம்

சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வைரல் ஆகிய வீடியோவில் அடையாளம் தெரியாத ஒரு விசித்திரமான மற்றும் அசாதாரணமான ஒரு உயிரினத்தின் உருவம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தெரியும் விசித்திரமான உயிரினத்தை யாராவது அடையாளம் சொல்ல முடியுமா என்ற கேள்வியுடன் 'வென் அனிமல் அட்டாக்' என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.



வாயில் சிறிய பற்கள் போலத் தோற்றமளிக்கும் புள்ளிகள்

இந்த வீடியோவில் உள்ள விசித்திரமான தோற்றமுடைய உயிரினத்தைக் கொண்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் இந்த உயிரினத்திற்கு ஒரு குழாயிலிருந்து உணவு சாப்பிட வழங்கப்படுகிறது. வீடியோவில் காணப்படும் இந்த உயிரினம் அதன் வாயில் சிறிய பற்கள் போலத் தோற்றமளிக்கும் வித்தியாசமான புள்ளிகளைக் கொண்டுள்ளது, சிறிய பின்னங்காலுடன், முன்னாள் மொட்டையான கைகளுடன் காணப்படுகிறது.

டெமோகோர்கன் போல இருக்கிறதா?

கண்கள் எதுவும் இல்லாமல் அடையாளமே தெரியாமல் காட்சியளிக்கிறது. இது நெட்ஃபிலிக்ஸில் வரும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸ் இல் வரும் 'டெமோகோர்கன்' (Demogorgon) உயிரினம் போல காட்சியளிக்கிறது என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சில மார்வெல் ரசிகர்கள் இது வெனோம் வில்லன் போல உள்ளது என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

பறவையின் குஞ்சு

இந்த வீடியோவை பார்த்துவிட்டு, இதன் பின்னணி என்ன என்ற ஆராய்ந்த பொது தான் உண்மை விளங்கியது. உண்மையில் இது ஒரு பறவையின் குஞ்சு என்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு இதன் உண்மையான பெயர் என்ன என்று ஆராய்ந்த போது தான் வலைத்தளத்தில் பல தகவல் நமக்கு கிடைத்தது.

கோல்டியன் ஃபிஞ்ச்

இது ஆப்பிரிக்கன் சில்வர்பில் அல்லது கோல்டியன் ஃபிஞ்ச் அல்லது எஸ்ட்ரில்டிட் ஃபிஞ்ச் என்று அழைக்கப்படும் பறவையின் குஞ்சு என்பது உறுதியானது. குஞ்சில் பார்க்க விசித்திரமாக இருக்கும் பறவை வளர்த்தும் அழகான தோற்றத்தில் இருக்கிறது.

ஏலியன் ஸ்பான் என்று பரவிய வீடியோ வெறும் பறவை தான்

இந்த பறவைக்குஞ்சுகள் பிறந்தவுடன் இப்படி வினோதமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது, இன்னும் சிலர் இந்த பறவை குஞ்சை 'ஏலியன் ஸ்பான்' என்றும் குறிப்பிடுகிறார்கள். வளைத்ததில் இப்படிப் பல விசித்திரமான பல பெயர்களுடன் இந்த உயிரினம் விசித்திரமான முறையில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 755.5K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக