Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

ஜூம் செயலியை தூக்கி எறிந்த வர்த்தகர்கள் சங்கம்!

zoom

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தகவல் தொடர்புச் சேவைக்கு இனி ஜியோ மீட் செயலியைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ கான்பரன்ஸ் செயலியாகத் திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூம் (ZOOM) செயலிக்குப் போட்டியாக புதிய வீடியோ கான்பரன்ஸ் தளத்தை ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. ’மேக் இன் இந்தியா டிஜிட்டல்’ புரட்சியில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறியிருந்தார். மேலும் இந்த ‘ஜியோ மீட்’ (JioMeet) என்ற புதிய வீடியோ கான்பரன்ஸ் செயலியில் ஜூம் செயலிக்கு ஈடான அனைத்து வசதிகளும் இருப்பதாக அம்பானி கூறினார்.

ஜியோ மீட் செயலியில் ஒருவருக்கு ஒருவரும் பேசிக்கொள்ள முடியும்; அதேபோல அதிகபட்சமாக 100 பேர் கூட ஓரே நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச முடியும். இச்செயலியில் மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் ஐடி மூலம் உடனடியாக லாக்-இன் செய்யும் வசதி உள்ளது. தற்போது ஜூம் செயலியில் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் ஜியோ மீட் செயலியில் 24 மணி நேரமும் எவ்விதமான தடையுமின்றி HD தரத்தில் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது. அதேபோல, ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோ கான்பரன்ஸ் கால் பேச முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜியோ மீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூம் செயலிக்கு பதிலாக ஜியோ மீட் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும் தனது அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு செயலியாக ஜியோ மீட்டைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஜியோ மீட் செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் இந்த முடிவை மேற்கொண்டதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூம் செயலி அமெரிக்காவைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதில் சீனாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. ஜூம் செயலியில் சீனா கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க செயலியாக இருந்தால் கூட இனி வரும் காலங்களில் இந்தியத் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியர்கள் இருப்பதால் மற்ற நாட்டு தயாரிப்புகள் ஒவ்வொன்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலம் தொடங்கியது முதலே ஜூம் செயலியை அதிகமாகப் பயன்படுத்தி வந்ததாகவும், இனி அதை விடுத்து ஜியோ மீட் செயலியைப் பயன்படுத்தவிருப்பதாகவும் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவரான பி.சி.பார்தியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக