கிரகநிலை: சுக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) -
களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் -
தொழில் ஸ்தானத்தில் ராஹூ, புதன் - லாப ஸ்தானத்தில்
சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
செய்யும்
தொழிலில் அதீத நம்பிக்கை கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள்
பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தினாலும்
அதை சமாளித்து விடுவீர்கள். தைரியமாக எதையும் எதிர் கொள்வீர்கள். உங்கள்
மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
தொழில்
செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த
சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.
உத்யோகத்தில்
இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் கொடுக்கும்
அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
குடும்பத்தில்
தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள்
மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர்
சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள்.
அலர்ஜியும் வரலாம். கவனம்.
கலைத்துறையினருக்கு
நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும்.
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை
தரும்.
அரசியல்வாதிகளுக்கு
மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள்
மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.
பெண்களுக்கு
வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள்,
உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே
தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம்.
மாணவர்களுக்கு
படிப்பில் கவனம் தேவை. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை
பார்க்கலாம்.
உத்திரம் 2, 3,
4 பாதம்:
இந்த மாதம்
தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல்
ஏற்படும். மனதெளிவு உண்டாகும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி
கிடைக்கும்.
அஸ்தம்:
இந்த மாதம்
பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண
வேண்டி இருக்கும்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம்
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே
கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம்
தேவை.
பரிகாரம்: முடிந்தவரை பெருமாள் ஆலயத்தை வலம்
வந்தால் நல்லது.
அதிர்ஷ்ட
கிழமைகள்:
திங்கள், புதன்
சந்திராஷ்டம
தினங்கள்: ஆகஸ்ட்
10, 11
அதிர்ஷ்ட
தினங்கள்: ஆகஸ்ட்
3, 4.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக