கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில்
செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்
ராஹூ, புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம்
வருகின்றன.
பலன்:
அடிமனதில் எதையும் கணக்கு பார்க்கும்
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த
கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக
சிறப்பாக நடக்கும். கடுஞ்சொற்களை பேசுவவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மதிப்பு
உயரும்.
குடும்பத்தில் தாய் தாய்வழி
உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும்.
பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக
இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள்.
அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள்
வரலாம். கவனம்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும்
இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம்.
தொழில் செய்பவர்கள் எங்கு முதலீடு
செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும்
முயற்சி செய்து பார்த்தல் கூடாது.
கலைத்துறையினருக்கு
உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத்
தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.
அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக
வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும்
அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன்
உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது
கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்.
மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட
விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பதை விடுத்து
நீங்கள் நன்று படியுங்கள்.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் எதையும் செய்யும் முன்பு
திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல்
கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு திருப்தி தரும்.
சுவாதி:
இந்த மாதம் எதிலும் மெத்தனமாக
செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு மனம்
மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் அரசாங்க பணிகள் மிக
துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும்
காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள்.
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 16, 17, 18; ஆகஸ்ட் 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 5, 6, 7.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக