Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஜூலை, 2020

விருச்சிகம்: ஆடி மாத ராசி பலன்கள்

Viruchigam
கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன்   - அஷ்டம   ஸ்தானத்தில் ராஹு, புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
புதிய உறவுகள் அதிகம் கிடைக்கப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம்  வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி  புதிய விதமான உறவுகள் நீடிக்கும். 

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.  தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. அனுபவமிக்கவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலீடு செய்வது நலம். உங்கள் முயற்சி  வீண் போகாது. 

குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.  கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். 

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு  உண்டு.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும்.  தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை.

மாணாவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். 

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

அனுஷம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. . குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். 

கேட்டை:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக  இருக்கும். 

பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை  வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 19, 20; ஆகஸ்ட் 15
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 8, 9.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக