கிரகநிலை: ராசியில் கேது, குரு (வ), சனி
(வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்,
சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு, புதன் - அஷ்டம
ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
கொடுத்த
வாக்கை காப்பாற்றத் துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களது
யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிப்பார்கள். உங்களது மேலான யோசனைகளை
சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப்
போகிறது. தைரியம் பிரகாசிக்கும்.
எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம்.
எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம்.
தொழில்
செய்பவர்களுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வர். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.
சிலர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு
வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள்
கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வும்
கிடைக்கும்.
குடும்பத்தில்
எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி
உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில்
மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.
அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த
வேண்டாம்.
கலைத்துறையினர்
கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால்
நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது
நல்லது.
அரசியல்வாதிகள்
வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள்
உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.
பெண்கள்
சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த
செலவுகள் காத்திருக்கின்றன. கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே
நடைபெறும்.
மாணவர்கள்
விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம்
காட்டுவீர்கள்.
மூலம்:
இந்த
மாதம் மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு
நீங்கும்.
பூராடம்:
இந்த
மாதம் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம்
வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக
சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த
மாதம் நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அறிவு திறமை
வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின்
குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச்
சென்று வியாழக்கிழமைதோறும் வலம் வரவும்.
அதிர்ஷ்ட
கிழமைகள்: புதன்,
வியாழன்
சந்திராஷ்டம
தினங்கள்: ஜூலை
21, 22
அதிர்ஷ்ட
தினங்கள்: ஆகஸ்ட்
10, 11.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக