Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

'ஏரி மனிதன்' காமேகவுடா இனி வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம்.!

'ஏரி மனிதன்' காமேகவுடவுக்கு கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகமானது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவல்லி தாலுகாவில் அமைந்துள்ள தாசனடோடி  எனும் கிராமத்தை சேர்ந்தவர் காமேகவுடா. 84 வயதான இவர் இதுவரை தனது வாழ்நாளில் தான் வசிக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் 16 சிறிய குளங்களை கட்டியுள்ளார். இவர் கால்நடைகளை மேய்க்கும் தொழில் செய்து கொண்டே இந்த 16 சிறிய குளங்களையும் கட்டியுள்ளார்.

இவரது இந்த அசாத்திய செயல் காரணமாக இவரை லேக் மேன் அதாவது ஏரி மனிதன் என அனைவரும் அழைக்கின்றனர். இவரை பற்றி பிரதமர் நரேந்திர மோடி தான் பங்கேற்கும் மான் கி பாத் நிகழ்ச்சியில் இவரைப் பற்றி பெருமையாக பேசி உள்ளார். மேலும், இவரை கௌரவிக்கும் வகையில் கர்நாடக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்யோத்ஸவ எனும் விருது வழங்கியுள்ளது.

இவர் ஏற்கனவே, பசாவாஸ்ரி எனும் விருது பெற்றுள்ளார். அப்போது கிடைத்த பணத்தையும், ஏரி குளங்களை தூர்வார பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் பேசுகையியல், அனைத்து ஏரி குளங்களையும் ஒன்றிணைத்து நீர்நிலைகளை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

'ஏரி மனிதன்' காமேகவுடவுக்கு ஒரு ஆசை இருந்து உள்ளது. அதாவது அண்டை மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசிக்க ஆசைப்பட்டுள்ளார். அதனை நிறைவேற்றும் வகையில், தற்போது கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகமானது இவருக்கு இலவச பாஸ் வழங்கியுள்ளது. ஓவர் வாழ்நாள் முழுவதும், கர்நாடக மாநிலத்தில் எங்கே வேண்டுமென்றாலும் கட்டணமின்றி  எந்த பேருந்திலும் எந்த வகுப்பிலும் இலவசமாக பயணிக்கலாம்.

இதன் மூலம் காமேகவுடாவின் அண்டை மாவட்டங்களில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்கும் ஆசை நிறைவேறும் என பலரும் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக