Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

4-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சல் மற்றும் அதை கையாளுவதற்குரிய அனுபவத்தையும் தருவாரே தவிர சனிபகவான் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனை கீழே போக செய்யமாட்டார்.

வெளியில் செல்ல தயங்கக்கூடிய தொழில்களுக்கு சனி காரகத்துவம் பெறுகிறார். இவை தவிர கறுப்பு தானியங்கள், பெட்ரோல், சினிமா போன்றவற்றிற்கும் சனி காரகத்துவம் பெறுகிறார். சனி வலுகுறைந்திருந்தால் ஜாதகருக்கு ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சனியின் வலுகுறைந்து இருப்பவர்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசிக்கலாம். சனிபகவானை தரிசிக்கும்போது ஓரமாக நின்றுதான் அவரை தரிசிக்க வேண்டும். நேருக்கு நேர் நின்று அவரை வணங்கக்கூடாது.

லக்னத்திற்கு 4-ம் இடத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர் வெளிநாடு சென்றால் வெற்றி பெறுவார்கள்.

4-ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

👉 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

👉 பெருத்த உடல்வாகு உடையவர்கள்.

👉 உறவினர்களால் ஆதாயம் குறைவு.

👉 திடீர் இழப்புகளை உடையவர்கள்.

👉 தனிமையை விரும்பும் தன்மை உடையவர்கள்.

👉 நல்ல சிந்தனையாளர்கள்.

👉 சோம்பேறித்தனமான குணம் உடையவர்கள்.

👉 அரசியலில் ஆதாயம் இல்லாதவர்கள்.

👉 சிலருக்கு தடைகளை உடைய கல்வி ஏற்படலாம். 

👉 வாகனத்தினால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக