இந்தியாவின் முன்னணி பெண்கள் உள்ளாடை
நிறுவனமாக இருக்கும் Zivame நிறுவனத்தில் மும்பையைச் சேர்ந்த தனியார் முதலீட்டு
நிறுவனமான யுனிலேசர் வென்சர்ஸ் வைத்திருந்த பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்
வாங்கியுள்ளது. இதோடு நிற்காமல் ரிலையன்ஸ் தற்போது இந்நிறுவனத்தில் பிற
முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனச் செய்திகள்
வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆடை பிரிவு வர்த்தகத்தில்
வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் தனது வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும்
விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து முன்னணி பிராண்டுகளுடன் கூட்டணி வைத்தும்,
வர்த்தகத்தைக் கைப்பற்றியும் மேம்படுத்தி வந்தது.
தற்போது நாட்டின் முன்னணி ஆடம்பர
பெண்கள் உள்ளாடை நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலா பங்குகளைக் கைப்பற்றத்
திட்டமிட்டு வருகிறது.
ரிலையன்ஸ்
பிராண்ட்ஸ்
இந்தியாவில் ரீடைல் வர்த்தகத்தில்
மிகப்பெரிய புரட்சியை உருவாக்க காத்துக்கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல்
பிரிவின் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் தற்போது பெரிய அளவில்
விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தான் டாப்
கிளாஸ் பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையிலான வர்த்தகத்தைக்
கைப்பற்ற முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.
1200
கோடி ரூபாய்
ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் ஏற்கனவே ஆடம்பர
பிரிவில் ஜிம்மி சூ, டிஃபென்னி, டீசல் மற்றும் மதர்கேர் ஆகிய பிராண்ட் பொருட்களை
விற்பனை செய்து வரும் நிலையில், 160 மில்லியன் டாலர் அல்லது 1200 கோடி ரூபாய்
அளவிலான தொகையை முதலீடு செய்து Zivame நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக்
கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள்
Zivame நிறுவனத்தின் பங்குகளைக்
கைப்பற்ற ஏற்கனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சோடியஸ் கேப்பிடல் மற்றும்
மலேசியாவின் கஜானா நேசினல் பெர்காட் நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் பிராண்ட் தற்போது
பேசி வருகிறது.
100சதவீத
பங்குகள்
ரிலையன்ஸ் பிராண்ட்-ன் பேச்சுவார்த்தை
குறித்து அறிந்த ஒருவர், இந்தப் பேச்சுவார்த்தை சிறப்பாக முடிந்தால் நிச்சயம்
ரிலையன்ஸ் பிராண்ட் Zivame நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றும் எனத்
தெரிகிறது எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்நிறுவனம் 50 மில்லியன்
டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டபோது இந்நிறுவனத்தை 200 மில்லியன்
டாலருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முதலீடு திட்டம் வெற்றி
அடையவில்லை.
Ronnie
Screwvala
கடந்த வாரம் யுனிலேசர் வென்சர்ஸ்
தலைவர் Ronnie Screwvala வைத்திருந்த 15 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்
கைப்பற்றியது.
இந்நிலையில் Zivame நிறுவனத்தில்
சோடியஸ் கேப்பிடல் 60 சதவீத பங்குகளையும், மலேசியாவின் கஜானா நேசினல் பெர்காட் 25
சதவீத பங்குகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பங்குகளைக் கைப்பற்றத்
தான் தற்போது ரிலையன்ஸ் பிராண்ட் இரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறது.
வர்த்தகம்
Zivame இந்தியாவில் 35 கடைகளையும்,
இணையத் தள வர்த்தகத்தில் பல லட்ச வாடிக்கையாளர்களும் வைத்துக் கடந்த நிதியாண்டில்
மட்டும் சுமார் 140 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈர்த்துள்ளது.
இந்நிறுவனம் 2011ஆம் ஆண்டு ரிச்சா கார்
என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பெண்கள் உள்ளாடைகளுக்கெனப் பிரத்தியேக
தளமாக இந்நிறுவனம் விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக