Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தனியார்மயம்! மார்ச் 2021-க்குள் பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவடையலாம்!

பாரத் பெட்ரோலியம்
பொதுத் துறை நிறுவனங்களை விற்று நிதி வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு, 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலேயே 2.1 லட்சம் கோடி ரூபாயை இலக்காக நிர்ணயித்து இருக்கிறது.
சுமாராக 23 அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய கேபினெட் அமைச்சகம் சமீபத்தில் அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
சரி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தனியார்மயம் செய்திக்கு வருவோம். இந்த கம்பெனியை வரும் மார்ச் 2021-ம் ஆண்டுக்குள் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவு அடையலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
 பாரத் பெட்ரோலியம்
 
இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 12,500 கோடி ரூபாயை முதலீட்டுச் செலவுகளாகச் (Capital Expenditure) செய்ய இருந்தது பாரத் பெட்ரோலியம். ஆனால் தற்போது கொரோனா பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், பாரத் பெட்ரோலியம் தன் முதலீட்டுச் செலவுகளை 8,000 கோடி ரூபாயாக குறைத்து இருக்கிறார்களாம்.
விற்பனை எப்படி
 
கடந்த ஆகஸ்ட் 2019-ம் கால கட்டத்தில், எவ்வளவு எரிபொருள் விற்பனை ஆனதோ, அதில் 90 % வரை, இந்த ஆகஸ்ட் 2020-ல் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறதாம். ஆக எரிபொருட்களுக்கான டிமாண்ட் ஏறத் தாழ பழைய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த தரவுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது
விரிவாக்கம்
பாரத் பெட்ரோலியம் கார்பப்ரேஷன் கம்பெனியை, தனியார்மயமாக்க அரசு வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட, 2020 - 21 நிதி ஆண்டுக்குள், இந்தியாவில் புதிதாக 1,000 பெட்ரோல் பங்குகளை நிறுவ திட்டம் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நிகர லாபம்
 
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனியின் ஏப்ரல் 2020 - ஜூன் 2020 வரையான கால கட்டத்தில், ஸ்டாண்டலோன் (Standalone) நிகர லாபம் 2,076 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2019 காலாண்டில் 1,075 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Refining margin
ஜூன் 2020 காலாண்டில், ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து எரிபொருளாக மாற்றினால் பேரலுக்கு 0.39 அமெரிக்க டாலர் தான் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஈட்டுகிறதாம். ஆனால் கடந்த ஜூன் 2019 காலாண்டில் 2.81 அமெரிக்க டாலர் ஈட்டியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக