சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் வீடியோ கேம்
விளையாட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பப்ஜி போன்ற விளையாட்டுகளை
சிறுவர்கள் உணவு கூட சாப்பிடமால் விளையாடுகின்றனர்,குறிப்பாக அதிக தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது இந்த பப்ஜி கேம்.
போர்ட்நைட்
என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோகேம்,எபிக் கேம்ஸ் நிறுவத்தால் கடந்த 2017-ம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. குறிப்பாக போர்ட்நைட் வளையாட்டும பப்ஜி போன்றுதான் இதுவும்
துப்பாக்கி சுடும் ஆன்லைன் கேம் ஆகும்.
போர்ட்நைட்
கேம் ஆனது உலகம் முழுக்க கேம் பிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம், ஒரே நேரத்தில் இதில் நான்கு பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து கூட
ஆன்லைன் மூலம் இணைந்து விளையாடமுடியும்.
மேலும்
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தை சேர்ந்த டிம் ஸ்வீனே, ஏபிக் கேம்ஸ் நிறுவனத்தை
2017ம் ஆண்டு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது, அப்போது முதல் இப்போது வரை
அதிகளவு மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
உலகம்
முழுவம் கிட்டத்தட்ட 2.5கோடி பேர் இந்த ஆன்லைன் கேமை விளையாடி வருகின்றனர். கடந்த
2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் 1.8பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டி ஆன்லைன்
கேம் உலகில் கொடிகட்டிப் பறந்தது.
ஆனால் தற்சமயம் போர்ட்நைட் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில்
இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது எந்த ஒரு ஆன்லைன் கேமிலும் வாடிக்கையாளர் பணம்
செலுத்தி அப்கிரேடட் வெர்ஷனில் விளையாட, இயங்குதளங்களில் குறிப்பிட்ட பணம்
செலுத்தும்முறையை பின்பற்ற வேண்டும். ஆனால் எபிக் கேம்ஸ்குழுமம் இந்த சட்டத்தை
பின்பற்றாமல் வரம்பு மீறி செயல்பட்டதால் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள்
இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளன.
பின்பு
எபிக் கேம்ஸ் நிறுவனர் தன் பக்க நியாயத்தை நிரூபிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான இந்த ஆன்லைன் கேம் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது, மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக