>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 5 ஆகஸ்ட், 2020

    அமெரிக்கா கனடாவிற்கு சீனாவில் இருந்து வரும் மர்ம விதைகள்... சதி வேலையா..!!!!


    அமெரிக்கா கனடாவிற்கு சீனாவில் இருந்து வரும் மர்ம விதைகள்... சதி வேலையா..!!!!
    உலகெங்கிலும் சீன வைரஸ் ஆன கொரோனாவின் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை.  உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ளவர்களுக்கு சீனாவிலிருந்து ‘மர்ம விதைகள்’ வருகின்றன. இது மற்றொரு சீன சதியோ என்று பீதியடைந்துள்ளனர் மக்கள். 
    விதைகள் அடங்கிய வெள்ளை பாக்கெட்டுகளின் சீன எழுத்துக்கள் "சீனா போஸ்ட்" என்ற சொற்கள் காணப்படுகின்றன.
    இந்த மர்ம விதைகள் வேளாண் துறையை  பாதிக்கும் வகையிலான விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்., மேலும் அவற்றை நடவு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
    விதைகள்,  சீன எழுத்துக்களில் “சீனா போஸ்ட்” என்ற சொற்களை கொண்டுள்ள வெள்ளை நிற பேக்கேஜ்களில் வருகின்றன.
    வாஷிங்டனில் இருந்து வர்ஜீனியா வரை உள்ள மாநிலங்களும் குடியிருப்பாளர்களுக்கு வந்துள்ள இந்த விதைகளை விதிஅக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதைகள் பயிர்கள் அல்லது கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தாவர வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் வசிப்பவர்களுக்கு சந்தேகத்திற்கிடமான விதைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பிற பகுதிகளிலிருந்து வரும் விதைகள் பயிர்களை சேதப்படுத்தும் என்று தாவர வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
    அமெரிக்க வேளாண்மைத் துறை இப்போது இந்த விதைகளை  சேகரித்து, அவற்றை முழுமையாக விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 
    கனடா குடிமக்களுக்கும் இந்த விதைகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    “அங்கீகரிக்கப்படாத விதைகளை பயன்படுத்த வேண்டாம். அவை கனடாவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.  இதனால் நமது தாவர வளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்படும், ”என்று  கனடாவில் உள்ள வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இதற்கிடையில், சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று பேக்கேஜ்களில் உள்ள லேபிள்கள் போலியானவை என்றும் அவை பற்றிய தகவல்கள்  சரியில்லை எனவும் கூறியுள்ளது.
    இருப்பினும்,  இந்த சதி தொடர்பாக  கருத்து தெரிவித்துள்ள சிலர் இதை  மற்றொரு பயோவாராக இருக்கலாம் என கூறுகின்றனர்.  இது அமெரிக்காவின் விவசாயத்தின் மீதான தாக்குதலாக கருதப்படுகிறது.
    இருப்பினும், முழுமையான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை மற்றும் மர்மத்தை வெளிக்கொணர விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக