Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஆகஸ்ட், 2020

Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது! விலை மற்றும் விபரம்!



அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகை



பிலிப்ஸ் நிறுவனம் புதிதாக நான்கு ஆடியோ சாதனங்களை இந்திய சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்களில் ஒரு ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனமும், ஒரு வயர்லெஸ் நெக்பேண்ட் சாதனமும், ஒரு வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் சவுண்ட்பார் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகை
இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகையின் போது துவங்குகிறது. அமேசானில் பிரைம் டே சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் துவங்குகிறது. பிலிப்ஸ் நிறுவனத்தின் பிலிப்ஸ் TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், TAN2215BK வயர்லெஸ் நெக்பேண்ட், HTL4080 வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் HTL1045 சவுண்ட்பார் உள்ளிட்டவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்
இதில் TAT4205BK ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் மைலர்(Mylar) மெட்டீரியல் டிரைவர்களுடன் அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றது. இதில் மென்மையான ரப்பரைஸ்டு விங் டிப் ஐடியாவுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் IPX5 சான்று மற்றும் 20 மணி நேர பிளே பேக் டைம் பேட்டரி பேக்கப் உடன் வருகிறது.
HTL1045 சவுண்ட்பார்
புதிய பிலிப்ஸ் TAN2215BK வயர்லெஸ் நெக்பேண்ட் 9mm டிரைவருடன், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் சான்றிதழுடன் வருகிறது. இந்த நெக்பேண்ட் சாதனம் 11 மணி நேர பேட்டரி பேக்கப் உடன் வருகிறது. HTL1045 சவுண்ட்பார் மாடலில் HDMI ARC உடன் கூட 4K ஆடியோ, ப்ளூடூத், ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய பிலிப்ஸ் TAT4205BK ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ரூ. 6,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், TAN2215BK வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல் ரூ. 3,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் HTL4080 வயர்லெஸ் சவுண்ட்பார் சாதனம் ரூ. 16,990 என்று விலையிலும் HTL1045 சவுண்ட்பார் மாடல் ரூ. 9,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக