நாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது
பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை
பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள்
பற்றி பார்ப்போம்.
இரத்த சோகை
முந்திரி பருப்பில், காப்பர் சத்தானது
அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற
நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்பு
இந்த பருப்பில் உள்ள காப்பர்
சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்பாற்றலையும்
அதிகரிக்க செய்கிறது.
பித்தப்பை கற்கள்
முந்திரி பருப்பை நாம் அடிக்கடி உணவில்
சேர்த்துக் கொள்ளும் போது, இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன், பித்தப்பை
கற்கள், சிறுநீரக கற்கள் உருவாகுவதையும் தடுக்கிறது.
வயிற்று பிரச்னை
இந்த பருப்பை நாம் அடிக்கடி உணவில்
சேர்த்துக் கொள்ளும் போது, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நமக்கு
விடுதலை அளித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக