Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

அதிசயம்! பனியில் உறைந்து, பல மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த 19 வயது இளம்பெண்!

ஜீன் ஹில்லியார்ட் என்னும் பெண் -22 டிகிரி உறைநிலையில் ஆறு மணி நேரம் உறைந்து இருந்தார். ஆனால் அதிசயமாக அவர் உயிர் பிழைத்தார்.


ஜீன் ஹில்லியார்ட்டுக்கு இறுதியாக வெறும் இருட்டு மட்டுமே நினைவில் இருந்தது. அவர் எப்பொழுது உறைபனியில் மாட்டிக்கொண்டு ஆறு மணி நேரம் உறை நிலையில் இருந்து பின்பு உயிர் பிழைத்தாரோ அப்போதே அவர் மெடிக்கல் மிராக்கல் என்னும் ‘மருத்துவ அதிசய’மாக மாறிவிட்டார்.

40 ஆண்டுகள் கழித்தும் இந்த பெண் குறித்த இந்த விஷயங்கள் மருத்துவ அற்புதமாகவே கருதப்படுகின்றன.

ஜீன் ஹில்லியார்டின் குளிர்ச்சியான வீடு

1980 களில் 19 வயதான ஜீன் ஹில்லியார்ட் மின சோட்டா என்னும் சிறிய ஊரில் வசித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்ப்படி அந்த நகரின் மொத்த மக்கள் தொகையே 87 தான். அந்த நகரின் எல்லைக்கு அப்பால் வடக்கில் காடுகள், ஏரிகள் மற்றும் விளைநிலங்கள் இருந்தன.

டிசம்பர் 20, 1980 அன்று நள்ளிரவில் மினசொட்டாவில் உள்ள லெங்பியில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது ஜீன் ஹில்லியார்டினுக்கு அந்த விபத்து நடந்தது.

இதுக்குறித்து அவர் மினசொட்டா பொது வானொலியில் கூறியபோது “நான் எனது நண்பர்களை சந்திக்க சென்றேன்” என கூறியுள்ளார்.

ஜீன் ஹில்லியார்ட் பொதுவாக மாலை நேரங்களை லெங்பியில் உள்ள இளைஞர்களோடு கழிப்பார். மின சோட்டாவில் ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு மாலை நேரத்தில் பொழுதை மினசொட்டாவில் கழிப்பது விருப்பமான விஷயமாகும்.

அவர் அதற்காக அவரது தந்தையின் காரை எடுத்து சென்றார். அவர் பனி உறைந்த சாலையில் சென்றார். ஆனால் பனி உறைந்த சாலையில் செல்ல அந்த கார் உகந்தது கிடையாது. பனியில் செல்லும்போது எப்போதும் அதற்கு உகந்த வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

பனிக்கட்டியில் வழுக்கிய காரின் சக்கரத்தால் வண்டி தடம் புரண்டு பள்ளத்தில் சறுக்கியது. ஹில்லியார்ட் கவ்பாய் பூட்ஸ் அணிந்திருந்தார். கார் தடம் புரண்டததால் அவரது நண்பர் வாலி நெல்சனின் வீட்டிற்கு நடந்தே செல்ல அவர் தீர்மானித்தார்.

ஆனால் அவர் நண்பர் வீடு இரண்டு மைல் தொலைவில் இருந்ததாக நினைத்தார். அதனால் அவர் நினைத்ததை விட அதிக தூரத்தில் அவரது வீடு இருந்ததால் அவர் விரக்தியடைந்தார். “நான் ஒரு மலையை தாண்டியதும் அவருடைய இடம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் அங்கு நண்பருடைய வீடு இல்லை” என அவர் பேட்டியில் கூறினார்.

உறைந்து போனார்
இறுதியாக வாலியின் இடத்தில் எரியும் விளக்குகளை பார்த்தபோது அவரது இல்லத்துக்கு சமீபாய் வந்ததை ஜீன் ஹல்லியார்ட் அறிந்தார் ஆனால் திடீரென அனைத்தும் இருட்டாகிவிட்டது என அவர் கூறியுள்ளார்.

மறுநாள் காலை 7 மணியளவில் நெல்சன் எழுந்தார். அவர் வீட்டிற்கு வெளியே வந்த போது அவர் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் பனி மூடிய புல்வெளியில் ஏதோ ஒன்று வித்தியாசமாக தெரிவதை கண்டார். பிறகு அது மனிதன் என தெரிந்தது. அந்த மனிதரின் கோர்ட் மற்றும் கையுறைகளை கண்டதுமே அது ஹில்லியார்ட் என தெரிந்தது.

நெல்சனுக்கு ஹில்லியார்டை நன்கு தெரியும். ஆனால் அந்த நாளில் அவர் தனது நண்பருடன் டேட்டிங்கில் இருந்தார். நெல்சன் ஹில்லியார்டை பார்த்தபோது அவர் விரைத்து போயிருந்தார். அவரது கண்கள் அகலமாக திறந்து இருந்தன. அவர் தன் நண்பரின் வீட்டு வாசலை அடைவதற்கு சில நொடிகளுக்கு முன்பு மயங்கி போயிருந்தார்.

“நான் அவள் காலரை பிடித்து தாள்வாரத்தில் கொண்டு வந்து போட்டேன். அவள் இறந்துவிட்டாள் என்றே நான் நினைத்தேன். ஏனெனில் அன்று பெய்த உறைபனி கடுமையாக இருந்தது. ஆனால் அவரது மூக்கிலிருந்து நீர் குமிழ்கள் வருவதை கண்டேன்.” என்று நடந்த நிகழ்வு குறித்து நெல்சன் கூறுகிறார்.
அவர் மயக்கநிலையை அடைந்த பிறகும் கூட சில அடிகள் ஊர்ந்து வீட்டை நோக்கி வந்ததற்கான சுவடுகள் தெளிவாக தெரிந்தன என கூறப்படுகிறது.

நெல்சனுக்கு அவரது வீட்டின் முகப்பிற்கு ஒரு உறைந்த உடலை கொண்டு வருவது கடினமான காரியமாக இருந்தது. குறிப்பாக உறைந்து போன ஹில்லியார்டின் உடல் மிகவும் கனமாக இருந்தது. அவர்கள் ஹில்லியார்டின் உடலை காரில் எடுத்து போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அவர்கள் 10 நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே சென்றதும் ஹில்லியார்டை பார்த்த மருத்துவர்களே அவரை பிழைக்க வைக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளவில்லை.

மருத்துவ மர்மம்:
 
மருத்துவமனையில் இருந்த சில மருத்துவர்களுக்கு அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஹில்லியார்ட்டின் தோல் முழுவதாக உறைந்திருந்தது. இதனால் அவருக்கு ஊசி போட முடியவில்லை. ஊசிகள் உடைந்து போயின.

அவருடை உடல் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தது. அந்த அளவு குறைவான வெப்பநிலை ஒரு தெர்மோ மீட்டரிலேயே கிடையாது. அவருடைய முகம் சாம்பல் நிறமாக இருந்தது. அவளது கண்களில் ஒளி அடிக்கப்பட்டது. ஆனால் அந்த கண்ணில் எந்த ஒரு அசைவும் இல்லை.

அவர் இறந்துவிட்டதாகவே சிலர் நம்ப தொடங்கினர். ஆனால் மருத்துவர்கள் அவரது உடலை வெப்பமூட்ட முடிவு செய்தனர். அதற்காக வெப்பமூட்டும் பட்டைகளை அவர்கள் பயன்படுத்தினர். அதை வைத்து அவரது வெப்பநிலையை 88 டிகிரியாக உயர்த்த தீர்மானித்தனர். இறுதியாக 12 நிமிடங்களுக்கு பிறகு அவரது உடலில் மெல்லிய துடிப்பு தென்ப்பட்டது.

இப்போதுதான் நோயாளி உயிருடன் இருப்பதையே மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதுப்பற்றி கூறிய மருத்துவர் ஜார்ஜ் சேதர் கூறும்போது “அவர் இறந்துவிட்டார் என்றே நான் நினைத்தேன். ஆனால் அவர் மயக்கநிலையில் இருந்தார்” என்று அவர் கூறினார்.

இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு அவரிடம் பெரிதாக எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது உடல் விறைத்து போன இறைச்சி துண்டை போல திடமாக இருந்தது.

கண்விழித்த ஹிலியார்ட்
மறுநாள் காலையில் ஹில்லியார்ட் கண் விழித்தார், மதிய நேரத்தில் அவரால் பேச முடிந்தது. அவர் தனது தந்தையின் காரை உடைத்ததால் அதை குறித்து தந்தை என்ன நினைப்பார் என்று கவலைப்பட்டார்.

ஹில்லியார்ட் தான் இயல்பு நிலையை அடைந்ததாக உணர்ந்தார். அவரது வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு அவரது நினைவிலேயே இல்லை. நான் மயங்கி விழுந்தேன். ஆனால் கண் விழித்தபோது நான் மருத்துவமனையில் இருந்தேன் என அவர் கூறியுள்ளார்.

அவரிடம் பனியில் உறைந்த அனுபவத்தை பற்றி தெரிந்துக்கொள்ள பலர் ஆவலாக இருந்தனர். ஆனால் அவர் தனக்கு எதுவுமே நினைவில் இல்லை என கூறிவிட்டார். அது சிலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் பலர் ஜீன் ஹில்லியார்ட் பிழைத்தது அதிசயத்தின் உச்சம் என்று நம்பினர்.

இவரது கதை உள்ளூர் தேவலாயங்களில் தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை சென்றது. மேலும் அவர் ‘டுடே’ என்கிற நிகழ்ச்சிக்காக பேட்டி எடுக்கப்பட்டார். அதுப்பற்றி அவர் கூறும்போது “என்னை டாம் ப்ரோகாவ் பேட்டி எடுத்தார். அங்கு செல்லும்போது நான் எனது தாயையும் அழைத்து சென்றேன். அது மிகவும் வேடிக்கையான அனுபவமாக இருந்தது” என அவர் கூறினார்.

இப்படியாக பனியில் மிகப்பெரிய விஷயம் நடந்த போதிலும் அதை அவரை பெரிதாக பாதித்ததாக தெரியவில்லை. மினசொட்டா பல்கலைகழகத்தில் டாக்டர் டேவிட் பிளம்மர் இதுக்குறித்து கூறும்போது மிகவும் குளிரான நிலையில் பனியால் உடல் மூடப்படும் நிலையானது ஹைப்போதர்மியா என அழைக்கப்படுகிறது என்கிறார்.

அவர் தனது வாழ்க்கையில் 10 ஆண்டுகளில் ஒரு டஜனுக்கும் மேற்பட்டவர்களை உறைந்து போன நிலையில் இருந்து காப்பாற்றி உள்ளாராம்.

பிளம்மர்
மேலும் பிளம்மர் கூறினார். “உடல் உறைந்து தட்டினால் மரம் போல இருக்கும் நிலையில் நோயாளிகள் எங்களிடம் கொண்டு வரப்படுகின்றனர். அவர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். அவர்கள் உடலில் வெப்பம் உள்ளவரை அவர்கள் இறக்கவில்லை என நாங்கள் தெரிந்துக்கொள்கிறோம்”.

ஒரு நபரின் உடல் குளிர்ச்சியடையும்போது அவரது உடலில் உள்ள ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் உறக்க நிலையில் இருக்கும் கரடியின் நிலையை அவர்கள் அடைகின்றனர். இந்த நிலையில் அந்த மனிதருக்கு குறைந்த அளவே ஆகிஸிஜன் தேவைப்படுகிறது.

இதே விகிதத்தில் உடல் வெப்பநிலையும் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்போது உடல் பெரும்பாலும் குணமடைகிறது. ஜீன் ஹில்லயார்டின் உடலில் வெப்பமூட்டும் தகட்டை கொண்டு வெப்பப்படுத்தும்போது இதே நிகழ்வு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் இது ஒரு அதிசயமான செயல்தான் என பிளம்மர் கூறுகிறார்.

நவீன சாதனம் :
 
இதற்காக நவீன மருத்துவத்தில் ஒரு சிறப்பு சாதனம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சாதனம் நோயாளிகளின் இரத்தத்தை அவர்களின் உடலுக்கு திருப்பி அனுப்புவதற்கு முன்பு அவை வெப்பப்படுத்தி அனுப்பப்படுகிறது. சூடான இரத்தம் உள்ளே சென்று உடல் உறுப்புகளை வெப்ப படுத்துகிறது.

இதே தொழில்நுட்பம் பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு ஜஸ்டின் ஸ்மித் என்பவரை காப்பாற்றியது. அவர் பென்சில்வோனியாவில் 0 டிகிரிக்கு கீழ் உள்ள உறைநிலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் ஒரு விருந்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். போகும் வழியிலேயே உறைந்து விட்டார். அவரது உடலை அவர் தந்தை 12 மணி நேரம் கழித்து கண்டறிந்தார்.

அவசர அறைக்கு அழைத்து சென்றபோது அவரது உள் வெப்பநிலை 68 டிகிரியாக இருந்தது. மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்க துவங்கினர். மேம்பட்ட மருத்துவ அறைக்கு செல்வதற்கு முன்பு அவருக்கு இரண்டு மணி நேரம் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவர்கள் படிபடியாக ஸ்மித்தை மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றினர். ஆனால் அவர் இரண்டு வாரங்கள் கோமாவில் இருந்தார். அவரது மூளையில் ஆக்ஸிஜன் இல்லாததால் அவருக்கு எந்த விதமான உணர்ச்சிகளும் ஏற்படவில்லை.

இதுக்குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ஸ்மித் மிக குறைந்த உடல் வெப்பநிலையில் இங்கே வந்தார். அவர் பிழைத்ததே அதிசயம் என கூறுகின்றனர். அப்படியாக மருத்துவத்தில் இன்னொரு அதிசயத்தை ஸ்மித் செய்தார்.

ஹல்லியார்டை போலவே ஸ்மித்தையும் அவரது உயிரியல் வெப்பநிலையே காப்பாற்றியது. உறைந்த திடமான சூழ்நிலையே மனிதனை மரணத்திற்கு இட்டு செல்கிறது. இந்த நிலையில் மனிதன் ஆட்கொள்ளும் உறக்க நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஏனெனில் அவர்கள் உறைப்பனியில் மாட்டிக்கொள்வது முதல் இறப்புவரை தங்களது ஆழ்ந்த தூக்கத்தால் எதையுமே அறியாமல் போகிறார்கள். மேலும் தற்போதைய மருத்துவர்கள் துப்பாக்கி சூடு, தலை அதிர்ச்சி மற்றும் மாரடைப்பு போன்றவற்றில் இருந்து கூட மக்களை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

ஜீன் ஹில்லியார்ட் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை தற்சமயம் வாழ்ந்து வருகிறார். இப்போது வரை அவர் எந்தவிதமான மோசமான விளைவுகளை சந்திக்கவில்லை. இப்போது அவர் திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு குழந்தைகள் உள்ளன. அவருக்கு பிறகு விவாகரத்து ஆனது. ஆனால் இப்போது ஒரு போதும் அவர் இரவில் வண்டி ஓட்டுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக