Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 செப்டம்பர், 2020

தளர்வு அளித்தும் தொடங்கப்படாத தமிழ்சினிமாவின் பிக் பட்ஜெட் படங்கள்.?!

அரசால் அனுமதிக்கப்பட்ட 75 நபர்கள் அளவானது பெரிய படங்களுக்கு குறைவான நபர்களே ஆகும். ஆதலால் இந்த கொரோனா நடவடிக்கைகள் முற்றிலுமாக சரியான பின்பு பெரிய நடிகர்களின் பட சூட்டிங் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.
தமிழக அரசானது அண்மையில் வெளியிட்ட ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வுகளில்  சினிமா சம்பந்தப்பட்ட சூட்டிங் போன்ற வேலைகளுக்கு அதிகபட்சம் 75 ஆட்களை கொண்டு வேலை செய்ய அனுமதி அளித்தது.
அரசால் அனுமதி அளிக்கப்பட்டாலும், தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தொடங்க பெறாமல் இருந்து வருகிறது.
ஆனால், மற்ற மொழிகளில் சூட்டிங் அனுமதி அளித்தவுடன் உடனே கே.ஜி.எஃப்-2 போன்ற பெரிய படங்களில் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழ் சினிமாவில் இன்னும் ஷூட்டிங் பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படாமல் உள்ளது இது தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட 75 நபர்கள் அளவானது பெரிய படங்களுக்கு குறைவான நபர்களே ஆகும். ஆதலால் இந்த கொரோனா நடவடிக்கைகள் முற்றிலுமாக சரியான பின்பு பெரிய நடிகர்களின் பட சூட்டிங் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. அதனால் தற்போது சிறிய படங்களின் சூட்டிங் மட்டும் தமிழ் சினிமாவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக