Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 3 செப்டம்பர், 2020

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் ஆத்மிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களிலும்,மெகா ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் இதன் டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தேசிய விருதை வென்ற பிரியா கிருஷ்ணாசாமி இயக்குகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
விதார்த் நடித்த 'ஆள்' என்னும் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இதில் அவருக்கு ஜோடியாக 'மீசையை முறுக்கு' பட நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு நேற்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 'அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பிற விவரங்களை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!