கன்னியாகுமரி மாவட்டத்தில் தவறான சிகிச்சையின் பெயரில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவர் தலைமறைவானார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு எனும் பகுதியை சேர்ந்த அபினேஷ் என்கிற சிறுவன் சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
காய்ச்சல் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று திடீரென உயிரிழந்தான். இதனால், சிறுவனின் உயிரிழப்புக்கு தவறான மருத்துவ சிகிச்சையே காரணம் எனவும், ஆதலால், மருத்துவரை கைது செய்து, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையை சீல் வைக்கவேண்டும் என அச்சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், சிகிச்சை அளித்த முறுத்துவர் ஹோமியோபதி மருத்துவர் எனவும், அவரும் மனைவியும் சேர்ந்துதான் சிகிச்சை அளித்தார்கள் எனவும் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து, அந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. மேலும், தலைமறைவான மருத்துவரை விரைவில் கைது செய்வோம் என அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக