Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

சுஷாந்த் மரணத்தில் என்னை இழுப்பதா?: ரூ. 500 கோடி கேட்டு யூடியூபர் மீது அக்ஷய் குமார் வழக்கு

 Akshay Kumar: சுஷாந்த் மரணத்தில் என்னை இழுப்பதா?: ரூ. 500 கோடி கேட்டு  யூடியூபர் மீது அக்ஷய் குமார் வழக்கு - akshay kumar sues a youtuber over  sushant singh rajput issue | Samayam ...

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய யூடியூபர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் அக்ஷய் குமார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் இருக்கும் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று குடும்பத்தாரும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷித் சித்திக்கி என்பவர் யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,

எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி போன்ற பெரிய படங்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு கிடைத்தது அக்ஷய் குமாருக்கு பிடிக்கவில்லை. அக்ஷய் குமார் ஆதித்யா தாக்கரே மற்றும் மும்பை போலீசாரை ரகசியமாக சந்தித்து பேசினார். சுஷாந்தின் காதலி ரியா கனடாவுக்கு தப்பிச் செல்ல அக்ஷய் குமார் உதவினார் என்றார்.

இதையடுத்து ரூ. 500 கோடி நஷ்டஈடு கேட்டு ராஷித் சித்திக்கி மீது அக்ஷய் குமார் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ராஷித் சித்திக்கி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்களாம். முன்னாதாக போலி தகவல்களை பரப்பியதற்காகவும், சுஷாந்த் வழக்கில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் மகன் ஆதித்யா தாக்கரேவின் பெயரை இழுத்ததற்காகவும் ராஷித் கைது செய்யப்பட்டார்.

ராஷித் பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

சுஷாந்தின் மரணம் குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள். அதை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கிறார்கள். சுஷாந்தின் மரணம் குறித்து மீடியாக்களில் பல்வேறு தகவல்கள் வெளியானதும் யூடியூபர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி போலி தகவல்களை வெளியிடத் துவங்கினார்கள். மும்பை போலீசாரின் பெயரை கெடுத்து அவர்கள் நிறைய பணம் சமாபித்தார்கள் என்றார்.

ராஷித் சித்திக்கி பிரபலங்களை பற்றி பொய்யான தகவல்களை வெளியிட்டு 4 மாதங்களில் ரூ. 15 லட்சம் வரை சம்பாதித்துள்ளாராம். மேலும் அவரின் யூடியூப் சேனலுக்கு 2 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 3 லட்சமாக அதிகரித்துள்ளதாம்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக