ரெட்மி நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 50, ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 55 மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65 மாடல்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவிகளின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
தொலைக்காட்சி பயன்பாடு என்பது நீண்டகாலமாக வீட்டில் அங்கம் வகிக்கும் பொருள்., தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற் தொலைக்காட்சி தோற்றங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் எப்படி அனைவரையும் ஆக்கிரமித்து வருகிறதோ அதேபோல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி பயன்பாடு பிரதான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக கொரோனா பரவிய காலம் முதல் ஏணைய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதை ஓடிடி அணுகலோடு பெரிய திரையில் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டிவி தேவை கட்டாயமாகி இருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்டிவிகள் கேபிள், டிடிஎச் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த சிறந்தவையாக இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகளில் ஓடிடி அணுகல், யூடியூப் போன்ற பல்வேறு பயன்பாடுகள் பயன்படுத்த சிறந்தவையாக இருக்கிறது. மேலும் ஓடிடி வெளியீடுகள் பலரையும் கவர்ந்து ஈர்த்து வருகிறது. அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளங்கள் பல்வேறு சலுகைகளோடு வாடிக்கையாளர்கள் அணுகலை பெற்று வருகிறது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவசமாக ஓடிடி அணுகலை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
ரெட்மி அறிமுகத்திற்கு என்று தனி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் ரெட்மி. காரணம் ரெட்மி தயாரிப்புகள் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களோடு அறிமுகமாவதே ஆகும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ரெட்மி இணைப்பு சாதனங்கள், ஸ்மார்ட்டிவிகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. அதன்படி ரெட்மி மூன்று மாடல் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் 4கே ரக டிவிகள் ரூ.30,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. ரெட்மி நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 50, எக்ஸ் 55, எக்ஸ் 65 ஆகும், இந்த ஸ்மார்ட்டிவிகள் 4கே ஆதரவு டால்பி விஷன் ஆதரவுகளோடு வருகின்றன.
கவர்ச்சிகரமான பல்வேறு அம்சங்களோடு ரெட்மி ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களின் எச்டி ஸ்ட்ரீமிங் அம்சங்களை வழங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்டிவிகள் இதுதான். அறிமுகம் செய்யப்பட்ட மூன்று ஸ்மார்ட்டிவிகளும் வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகள் மாடல்களின் பெயர்கள் குறிப்பிடுவதுபோல் அளவுகள் மாறுபடுகிறது.
ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் தொடர்: அம்சங்கள்
ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 65 அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 65 இன்ச் 4கே யஎச்டி ஐபிஎஸ் பேனலுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி 3840x2160 பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி 92% டிசிஐ-பி3 வண்ண வரம்பு காட்சி, 85% என்டிஎஸ்சி அகல வண்ண வரம்பு ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் எச்டிஆர் 10+, எச்டிஆர் 10, எச்எல்ஜி சான்றிதழ்கள், டால்பி விஷன் ஆதரவுடன் வருகிறது. அதோடு இந்த எக்ஸ் 65 ஸ்மார்ட்டிவியில் இரட்டை 15 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் என 30 வாட்ஸ் ஆடியோ வெளியீட்டை வழங்குகிறது.
ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65, டிடிஎஸ் எச்டி ஆதரவுடன் வருகிறது. டிடிஎஸ் மெய்மநிகரானது எக்ஸ்ஓடிஏ புதிப்புப்பு வீதத்தோடு வருகிறது. இது ஏவி1, எம்பெக்1/2 வீடியோ கோடெக் ஆதரவுகளை வழங்குகிறது.
ஸ்மார்ட்டிவியானது 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 4கே 60 எஃப்பிஎஸ், 5மில்லி விநாடிகள் தாமத்துடன் அணுகமுடிகிறது. இது ஆட்டோ லெஸ்(குறைந்த) தாமத பயன்முறையுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவி குறைந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இந்தியாவில் இந்த மூன்று ரெட்மி ஸ்மார்ட்டிவிகளும், எச்டிஎம்ஐ 2.1 உள்ளீடுகள், இரண்டு யூஎஸ்பி 2.0 போர்ட்கள், இதர்நெட் போர்ட், ஏவி போர்ட், ஆப்டிகல் ஆடியோ போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உள்ளது. வயர்லெஸ் இணைப்பு ஆதரவுகளாக ஸ்மார்ட் டிவிகள் ப்ளூடூத் 5.0, இரட்டை பேண்ட் வைஃபை ஆதரவுகளுடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஆண்ட்ராய்ட் ஓஎஸ் 10 ஆதரவோடு இயக்கப்படுகின்றன.
ரெட்மி ஸ்மார்ட்டிவிகள் எக்ஸ் சீரிஸ்-ல் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகளின் மாடல்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 50, ரெட்மி எக்ஸ் ஸ்மார்ட்டிவி 55, ரெட்மி எக்ஸ் 65 ஆகிய மூன்று மாடல்கள் இருக்கின்றன. ரெட்மி எக்ஸ் 50 ஸ்மார்ட்டிவி, ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 55 மற்றும் ரெட்மி ஸ்மார்ட்டிவி எக்ஸ் 65 ஆகிய மூன்று மாடல்களின் விலை குறித்து பார்க்கையில், ரெட்மி எக்ஸ் 50 ரூ.32,999 எனவும் ரெட்மி எக்ஸ் 55 ஸ்மார்ட்டிவி மாடல் விலை ரூ.38,999 எனவும் ரெட்மி எக்ஸ் 65 மாடல் விலை ரூ.57,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4கே ஆதரவோடு கூடிய 50 இன்ச் டிஸ்ப்ளேவைவிட 65 இன்ச் மாடலின் விலை ரூ.25,000 அதிகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் மார்ச் 26முதல் எம்ஐ.காம் மூலமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி இந்த ஸ்மார்ட்டிவி தயாரிப்புகளின் 25-க்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் சேவை ஆதரவுகள், க்ரோம் காஸ்ட் பில்ட் இன், கூகுள் அசிஸ்டென்ட், எம்ஐ ஹோம் பயன்பாடுகளுடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்டிவி எம்ஐ.காம், அமேசான் இந்தியா, எம் ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ கடைகளில் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கும்போது ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக