விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் புதிய விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 22-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
விவோ Y72 5ஜி
விவோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டு வெளிவரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.
தரமான மீடியாடெக் எம்டி6833வி சிப்செட்
இந்த விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் எம்டி6833வி சிப்செட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கவ மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
64எம்பி பிரைமரி லென்ஸ்
விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி சூப்பர் வைடு லென்ஸ்+ 2எம்பி டெப்த் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
5000 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்;.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ Y72 ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த புதிய சாதனம் வெளிவரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக