உண்மை தெரியாமல் பேசிவிட்டததாக் கூறி விஜய், சூர்யா மற்றும் அவரின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். ஜோதிகா, சங்கீதா விஜய்யிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோலிவுட்டில் தனக்கு எதிராக சதி நடந்து வருவதாகக் கூறி வந்தார் மீரா மிதுன். மேலும் விஜய், சூர்யா ஆகியோரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டதுடன், அவ்வப்போது மோசமாக ட்வீட்டும் செய்தார்.
விஜய்யும், சூர்யாவும் நெபடிசம் ப்ராடக்டுகள், அப்பாக்களால் தான் இன்னும் நிலைத்து நிற்கிறார்கள் என்றார் மீரா. மேலும் விஜய்யின் மனைவி சங்கீதா, ஜோதிகா பற்றியும் படுமோசமாக விமர்சித்தார். இதை பார்த்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் விளாசினார்கள். அதை பார்த்து பதிலுக்கு விளாசியதுடன், விஜய், சூர்யா ரசிகர்கள் பற்றி ட்விட்டரில் பலரிடம் புகார் தெரிவித்தார் மீரா.
இந்நிலையில் இன்று மன்னிப்பு கேட்டு
வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் மீரா மிதுன் கூறியிருப்பதாவது,
என் எல்லா பிரச்சனைக்கும் அப்சரா ரெட்டி என்கிற திருநங்கை காரணம் என்பது எனக்கு
தெரிந்துவிட்டது. என்னுடைய நண்பனாக நடித்து இத்தனை நாள் இவ்ளோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.
என்னை சுற்றி நடந்த எல்லா குழப்பத்திற்கும் இந்த அப்சரா ரெட்டி தான் காரணம்.
இன்டஸ்ட்ரியில் இருக்கும் யாருமே காரணம் இல்லை என்பதை நான் இப்போ உணர்ந்துட்டேன்.
விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் எல்லாருமே என்னை மன்னிச்சிடுங்க. நடந்த
எல்லாவற்றுக்கும் விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
எல்லாத்துக்கும் விஜய், சூர்யா தான் காரணம் என்று என்னை நம்ப வைத்து கேம்
ஆடியிருக்காங்க. விஜய், சூர்யா மற்றும் இன்டஸ்ட்ரியில் இருக்கும் அனைவரிடமும்
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
என்னை சுற்றி நிறைய நடந்ததால் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்தில்
இருந்தேன். இன்டஸ்ட்ரியில் இருக்கும் அனைவரும் என்னை மன்னிச்சிடுங்க. எல்லா
பிரச்சனையும் செய்து அதை உங்க சைடு திருப்பிவிட்டதே இந்த அப்சரா ரெட்டி தான்.
என்னிடமும் அப்படித் தான் சொல்லியிருக்காங்க. அதற்கான எல்லா ஆதாரமும் என்னிடம்
இருக்கிறது. அதற்கு ஏற்றது போன்று நீங்கள் எனக்கு வாய்ப்பும் கொடுக்கவில்லை.
நேஷனல், இன்டர்நேஷனல் லெவலில் என்னை புகழ்ந்து வாய்ப்புகள் வரும்போது, சொந்த நாடான
தமிழ்நாட்டில் நன்றாக நடிக்கும் திறமை இருந்தும் வாய்ப்பு இல்லை. என் மார்க்கெட்
என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். தயவு செய்து ஈகோ பார்க்காதீங்க. விஜய்
ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் என்று அப்சரா ரெட்டி தான் ஒரு டீமை செட் பண்ணி என்னை
சைபர் புல்லியிங் செய்து அதற்கு விஜய், சூர்யா தான் காரணம் என்று என்னை நம்ப
வச்சாங்க என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக