வெள்ளி, 18 ஜூன், 2021

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் ஜியோ நிறுவனம் கடந்த
வாரம் சில ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது, அதற்கு போட்டியாக தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் No Daily Limit வசதியுடன் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 50 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. no daily limit வசதியுடன் இந்த திட்டம் வெளிவந்துள்ளதால் இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ்,ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச நன்மைகள் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்