வெள்ளி, 18 ஜூன், 2021

மாணவர்கள் கவனத்திற்கு: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

தமிழத்தை பூர்விமாக கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு மாணவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும். மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும். மேலும் கவுன்சிலிங் மூலம் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் சேர வேண்டும்.

முதல் தலைமுறை பட்டதாரி சலுகை

குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பது., ஒருவருக்கு அப்ளை செய்து அவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது அதே குடும்பத்தில் இரண்டாவது நபருக்கு அப்ளை செய்ய முடியாது. குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இந்த சலுகை செல்லும்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விண்ணபிப்பது எப்படி

தமிழக மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை எப்படி அப்ளை செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து பார்க்கையில், அது ரேஷன் கார்ட், பான் கார்ட், ஆதார் கார்ட் உள்ளிட்டவைகள் ஆகும். இந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு E-District Tamilnadu என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குள் செல்ல வேண்டும். சான்றிதழ் சேவை தேர்வை கிளிக் செய்து அதில் பயனர் பெயர் கடவுச்சொல் உள்ளிட வேண்டும்.

எளிய வழிமுறைகள்

முதல்தலைமுறை விண்ணப்பதாரிகள் விண்ணபிக்கும் போது போட்டோ, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பள்ளி டிசி, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் https://www.tnesevai.tn.gov.in/ (கூகுள் வலைதளத்தில் Tnega) என்ற தளத்திற்கு நுழைய வேண்டும்.

இந்த தளத்துக்குள் சென்று சிட்டிசன் லாக்இன் என்ற தேர்வை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும். தங்களுக்கு கணக்கு இல்லை என்றால் அதை உருவாக்க வேண்டும். யூஸர் பெயர், கடவுச்சொல், கேப்ட்சா உள்ளிட்டவைகளை பதிவிட்டு உள்நுழைய வேண்டும். இதை ஓபன் செய்த பிறகு வருவாய் துறை (revenue department) என்ற முறை கிளிக் செய்து முதல்தலைமுறை பட்டதாரி என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

படிவங்களை பிழையின்றி பூர்த்தி செய்ய வேண்டும்

அதன்பின் அதில் ஆவணங்கள் கேட்கப்படும், அதை பிழையின்றி, தெளிவான முறையில் அப்லோட் செய்ய வேண்டும். இது அனைத்தையும் அப்லோட் செய்த பிறகு குடிமக்கள் கணக்கு எண் உள்ளிட்டவைகளை பதிவிட்டு Register Can என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ஓடிபி அனுப்பு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

ஓடிபி அனுப்பு என்பதை தேர்வு செய்த பிறகு, தாங்கள் பதிவிட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும் அதை பதிவிட்டு உள் நுழைய வேண்டும். அதன்பின் படிவம் ஓபன் ஆகும் அதை ஓபன் செய்து அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்ப பூர்த்தி கவனத்துடன் சரியாக செய்ய வேண்டும்.

அசல் ஆவணங்கள் தேவை

அதில் கரன்ட் கோர்ஸ் என்ற இடத்தில் கிராட்சூவேட் என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை தேர்வு செய்ய வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து சப்மிட் கொடுக்கவும். பின் டவுன்லோட் கொடுத்து தங்களது போட்டோவை பதிவேற்ற வேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் போட்டோ அளவு 50Kb அளவிற்கு குறைவாக இருத்தல் அவசியம், முகவரி சான்றுக்கு ஆதார், வாக்காளர், பான் உள்ளிட்டவை பதிவேற்றவும். அதோடு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகளின் அசல் கட்டாயம்.
        
ஆவண நிலையை சரிபார்க்கலாம்

அனைத்து படிவத்தையும் பூர்த்தி செய்த பிறகு make payment என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு கட்டணாக ரூ.60 செலுத்த வேண்டும். அதன்பின் தங்களுக்கு ஒப்புகை சீட்டு கிடைக்கும். இதை கிடைக்கும் எண்ணை வைத்து தங்களது ஆவண நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்