வெள்ளி, 18 ஜூன், 2021

ட்ரூகாலர் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம்.!

இந்நிலையில் க்ரூப் வாய்ஸ் காலிங், இன்பாக்ஸ் கிளீனர், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுவந்துள்ளது ட்ரூகாலர்

செயலி. குறிப்பாக இந்த புதிய அம்சங்களை பெற விரும்பினால் ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சமீபத்தியவெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அனுப்பிய கருத்துக்கள் அடிப்படையில் இந்த புதிய மூன்று அமசங்களை கொண்டுவந்துள்ளதாக ட்ரூகாலர் நிறவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய அம்சங்கள் கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரூப் வாய்ஸ் கால் அம்சம்

க்ரூப் வாய்ஸ் கால் அம்சம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது க்ரூப் வாய்ஸ் காலின் போது, க்ரூப்பில் பயனருக்கு தெரியாமல் ஏதேனும் ஸ்பேம் பயனர்கள் சேர்கப்பட்டிருந்தால் உடனே அவர்களை ட்ரூகாலர் அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது. பின்பு பயனர்கள் புதிய பங்கேற்பாளர்களை தங்களது போன் காண்டாக்டில் சேர்க்காமலேயே வாய்ஸ் காலின்போது ஆட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த அம்சம் பயனர் மற்றொரு அழைப்பில் அல்லது ஆஃப்லைனில் பிஸியாக இருக்கிறாரா என்பதை வெளிப்படுத்தும். பின்பு க்ரூப் வாய்ஸ் காலின் முக்கிய அம்சம் என்னவென்றால் பங்கேற்பாளரின் நகரத்தை பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த பாதுகாப்பு வசதிக்கு என்றே வெளிவந்துள்ளது இந்த புதிய அம்சம்.

இன்பாக்ஸ் கிளீனர் அம்சம்

ட்ரூகாலர் செயலியில் வந்துள்ள இன்பாக்ஸ் கிளீனர் அம்சம் ஆனது தேவையற்ற மற்றும் பழைய மெசேஜ்களை சில நிமிடங்களில் அழிக்க உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் மெனுவில் எத்தனை பழைய ஓடிபி-கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும். பின்பு கிளீன் ஆப் பட்டனை கிளிக் செய்தால் உங்கள் முக்கியமான தரவைப் பாதிக்காமல் பழைய எஸ்எம்எஸ்களை விரைவாக அகற்றும்.

ஸ்மார்ட் எஸ்எம்எஸ் அம்சம்

ஸ்மார்ட் எஸ்எம்எஸ் அம்சம் ஆனது ஸ்பேமை அடையாளம் கண்டு பில்டர் செய்யவும், பயனுள்ள தகவல்களை வகைப்படுத்துவதும், நிலுவையில் உள்ள பேமெண்ட்களை பற்றி நினைவூட்டவும் பயன்படும். குறிப்பாக இந்தியா கென்யா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும் என்றும், விரைவில் அமெரிக்கா, எகிப்து, மலேசியா, சுவீடன் போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும் என்று என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்