Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 ஜூன், 2021

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சாஸ்தாநகர், சேலம் மாவட்டம்.

அமைவிடம் :

சாஸ்தாநகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம் குரங்குசாவடி அடுத்த சாஸ்தா நகரில் அமைந்துள்ளது.

மாவட்டம் :

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சாஸ்தாநகர், சேலம் மாவட்டம்.

எப்படி செல்வது?

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் சேலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது.

கோயில் சிறப்பு :

நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை தமிழகத்தில் எங்கும் நடைபெறுவதில்லை. புதுச்சேரி மாநிலத்தின் புகழ் பெற்ற திருநள்ளாறு தலத்தில் கூட இப்பூஜை இல்லை. ஆனால், இந்த பூஜை சேலம் சாஸ்தாநகர் ஐயப்பன் கோயிலில் நடக்கிறது.

ஆண்டுதோறும் 'சகஸ்ர கலசாபிஷேகம்" நடக்கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து 'புனித நீர்" கொண்டுவரப்படுகிறது. 

இந்த சமயத்தில் பிரம்மாண்டமான வேள்வி நடத்தி, புண்ணிய நதிகளின் நீரை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு பூஜை செய்வர்.

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்கள் தங்க இடமும், உணவும் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.

கோயில் திருவிழா: 

மகர ஜோதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவானி கூடுதுறையில் உற்சவருக்கு ஆறாட்டு நடத்தி, யானையின் மேல் திருவாபரண பெட்டி வைத்து வீதியுலாவாக சேலம் கொண்டு வரப்பட்டு, 'கூச" மலையில் கற்பூர ஜோதி ஏற்றப்படுகிறது. அதேபோன்று தினமும் கணபதிஹோமம் செய்து கோயிலை சுத்தம் செய்தும், பூஜைக்கு பின்னர் இரவு ஹரிவராசனத்துடன் நடையை சாத்துகின்றனர்.

பிரார்த்தனை :

திருமணத்தடை, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இந்த குறையுடன் வருபவர்களுக்காக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. அதுமட்டும் அல்லாமல் நவகிரக ப்ரீதியும் செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் : 

சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக