Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 ஜூன், 2021

குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம்.. எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்....!!
-------------------------------------
அமலா : குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம்.
விமலா : எப்படி?
அமலா : அது மேல தான் றுநiபாவ போடறோம் இல்ல?
விமலா : 😆😆
-------------------------------------
அம்மா : ஏன்டி, பரீட்சைக்கு போகும் போது நிறைய பரிசு வாங்கிட்டு போற?
மகள் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க, பரீட்சைல நல்லா Pசநளநவெ பண்ணனும்ன்னு.
அம்மா : 😦😦
-------------------------------------
பயனுள்ள குறிப்புகள்...!!
-------------------------------------
🌟 பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.

🌟 புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

🌟 தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.
-------------------------------------
சிந்தனை வரிகள்...!!
-------------------------------------
👉 துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.

👉 எப்பொழுதும் உங்களையே நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களையும் நினைத்துப் பொதுநலமாக சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். 

👉 எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை அதன் இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்கு பெயர்தான் பக்குவம். நீங்கள் பக்குவப்பட்ட மனிதராக இருங்கள். 

👉 உங்கள் எண்ணங்களை உயரத்தில் வையுங்கள். சிறு சிறு சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்.
நான்கு விஷயங்களை ஆபரணமாக அணி!
👑 பொறுமை

👑 சாந்த குணம்

👑 அறிவு

👑 அன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக