Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 மார்ச், 2022

ஒரு வாரம்தான் இருக்கு... குறைவான விலையில் வருகிறது புதிய ராயல் என்பீல்டு பைக்! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

புத்தம் புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது. ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

முன்னதாக ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் கடந்த பிப்ரவரி மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை காரணமாக, ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வருவது சற்று தள்ளி போய் விட்டது. எனினும் தற்போது உறுதியான அதிகாரப்பூர்வ தேதியை ராயல் என்பீல்டு அறிவித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தலைசிறந்த அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரக பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக்கின் விலை குறைவான வெர்ஷன் என ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கை கூறலாம்.

புத்தம் புதிய ஸ்க்ராம் 411 பைக், ராயல் என்பீல்டு டீலர்ஷிப்பில் நிறுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளி வந்தன. ராயல் என்பீல்டு நிறுவனம் தனது டீலர்ஷிப்களுக்கு ஸ்க்ராம் 411 பைக்கை அனுப்பும் பணிகளை தொடங்கி விட்டதை இது உணர்த்தியது. அத்துடன் இந்த பைக் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதையும் இது நமக்கு எடுத்துக்காட்டியது.

இதற்கேற்ப வரும் மார்ச் 15ம் தேதி ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் வெளியான புகைப்படங்களில், ப்ளாக் உடன் மெரூன்/யெல்லோ ஹைலைட்கள் மற்றும் ஒயிட் உடன் ரெட்/ப்ளூ ஹைலைட்கள் என 2 விதமான வண்ண தேர்வுகளில் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கை நம்மால் காண முடிந்தது.

இதன் மூலம் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் பல்வேறு விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் மார்ச் 15ம் தேதிதான் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும். ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கில், 411 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே கியர் பாக்ஸ்தான், புத்தம் புதிய ஸ்க்ராம் 411 பைக்கிலும் வழங்கப்படும். எனினும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குடன் ஒப்பிடும்போது பல்வேறு விதங்களிலும் வேறுபட்டதாக ஸ்க்ராம் 411 பைக் இருக்கும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் முன் பகுதியில் சிறிய 19 இன்ச் வீல்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பின் பகுதியை பொறுத்தவரை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை போலவே, ஸ்க்ராம் 411 பைக்கிலும் 17 இன்ச் வீல்தான் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் 2.14 லட்ச ரூபாய் முதல் 2.22 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை குறைந்த வெர்ஷன்தான் புதிய ஸ்க்ராம் 411 பைக்.

இதன்படி பார்த்தால் புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் விலை 1.75 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதாவது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குடன் ஒப்பிடும்போது, ஸ்க்ராம் 411 பைக்கின் விலை சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே மார்ச் 15ம் தேதிக்காக ராயல் என்பீல்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஸ்க்ராம் 411 பைக்கை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் மேலும் பல்வேறு புதிய பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக