இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகங்களும்
தான் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பார்ப்பார்கள். அதனைக்
கொண்டு சுப, அசுப பலன்கள் நிர்ணயிக்கப்படுகிறது. கிரகங்கள் மொத்தம் 9 என்பதை நாம்
அறிவோம். சிலர் மாந்தி அல்லது குளிகனையும் சேர்த்து பத்து கிரகம் என்று சொல்வது
உண்டு.
இது கேரள முறை ஆகும். நம் தமிழ்
நாட்டிற்கு ஒத்து வராது. இன்னும் சில கம்ப்யூட்டர் ஜாதகத்தில் ஒரு படி மேலே போய் 8
ஆம் வகுப்பு பாடத்தில் படித்த நெப்ட்யூன், யுரேனஸ் என்று எல்லாம் கட்டத்தில்
எழுதுவார்கள். அவையும் தமிழ் நாட்டுக்கு ஒத்து வராது.
இன்னும் சொல்லப் போனால் குழப்பத்தை
தான் தரும். ஏனெனில் நமது பாரம்பரிய முறைப் படி சூரியன் முதல் கேது வரையில்
கோயில்களில் இருக்கும் நவக்கிரகங்கள் மட்டுமே சத்தியமானது. அவைகளை மட்டும் வைத்து
தான் பலன் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை வெளிநாட்டு ஜோதிடங்கள் வந்தாலும் அவை
நமது பாரம்பரிய ஜோதிடத்தின் முன்னாள் நிற்கக் கூட முடியாது. இப்போது ஒரு
ஜாதகத்தில் கிரக பார்வையை பற்றிப் பார்ப்போம்.
குரு பகவான் தான் இருக்கும் இடத்தில்
இருந்து 5,7,9 ஆகிய இடங்களைப் பார்ப்பார். செவ்வாய் தான் இருக்கும் இடத்தில்
இருந்து 4,7,8 ஆகிய இடங்களை பார்ப்பார். சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து
3,7,10 ஆகிய இடங்களை பார்ப்பார். ராகு/ கேதுவுக்கு பார்வை கிடையாது.
சிலர் அவைகளும் 7 ஆம் இடத்தை
பார்க்கும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அவைகள் சாயா கிரகங்கள்.
கண்ணுக்கு தெரியாத கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள். மற்றபடி சந்திரன், சூரியன்,
சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் இடத்தை
பார்ப்பார்கள். ஒரு கிரகம் தனிப்பட்ட ஒருவருக்கு சுபகிரகமா இல்லை பாபக் கிரகமா
என்பது அவரவர் ஜாதக அமைப்பை கொண்டது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் எனில்,
குரு சுபர் என்று அடிப்படையில் சொல்வோம் ஆனால் குரு தசையில் வாழ்க்கையை
இழந்தவர்களும் உள்ளனர். சனி பாவ கிரகம் என்று சொல்வோம் ஆனால் சனி தசையில்
குப்பையில் இருந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆனதும் உண்டு. என் அனுபவத்தில் இவை
இரண்டையுமே நான் பார்த்து விட்டேன். ஆக, ஒரு ஜாதகத்திற்கு எந்த கிரகம் சுபர், எந்த
கிரகம் அசுபர் என்பது அந்த ஜாதகத்தை பொறுத்தது.
அருமை. நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குதிரு இளஞ்செழியன் உங்கள் ஊக்கமான கருத்திற்கு நன்றி தோழா
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்
பதிலளிநீக்கு