Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கந்த சஷ்டி ஸ்பெஷல் : சூரபத்மனின் முட்டாள் தனம்... அப்படி என்ன செய்தான்?...

 Image result for சூரபத்மனின்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கந்த சஷ்டி ஸ்பெஷல்...!!
 பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவபெருமான், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.
 பெண்ணின்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும், அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் ஆசிப்பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தனர். இதனால் இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

முருகன் தோன்றிய வரலாறு..!!

சூரபத்மன் என்ன செய்தான்?

சூரசம்ஹாரம் எவ்வாறு நிகழ்ந்தது....? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்...!!
சூரசம்ஹாரம் - பகுதி 01...!!
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைப்பவரான பிரம்ம தேவரின் புத்திரர்களில் ஒருவர் காசிபர். அவர் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றவர். ஒரு சமயம் தேவர்கள் யாவரும் வலிமை இழந்து இருந்த காலத்தில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் சக்திகளை அதிகரிக்கும் பொருட்டும் காசிபரின் தவ வலிமையால் அசுர குலம் தழைக்கும் பொருட்டு ஒரு திட்டம் செய்தார்.

தனது திட்டத்தை செயல்படுத்த அசுர குலத்தை சேர்ந்த அசுரேந்திரன் மற்றும் மங்களகேசினியின் தம்பதியருக்கு புதல்வியாக பிறந்த சுரஸையைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு தான் கற்ற பல மாய கலைகளையும் கற்று தந்தார் சுக்கிராச்சாரியார். கலைகளை கற்றுத்தேர்ந்த சுரஸையை பலவாறு சோதித்தார். சுக்கிராச்சாரியாரின் பல கடினமான செயல்களில் அகப்படாமல் தான் கற்ற கலைகளை கொண்டு வெற்றி கொண்டாள் சுரஸை. அவளின் சாதுர்யமான அறிவையும், செயல்திறனையும் கண்ட சுக்கிராச்சாரியார் இன்று முதல் மாயா என்று அழைக்கப்படுவாய் என்றும், பின்பு தனது மனதில் திட்டமிட்டு இருந்த எண்ணத்தை பற்றியும் கூறினார்.

மாயாவிடம், அசுர குல தேவர்கள் வலிமையும், அழிவுமின்றி இருக்க வேண்டும் என்பதே உன் தந்தையான அசுரேந்திரனின் ஆசையும், எண்ணமும் ஆகும். ஆனால், அசுர குலத்தை சேர்ந்தவர்களோ தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். நம் குலத்தை சார்ந்தவர்களின் அழிவைத் தடுக்க இயலக்கூடிய வாய்ப்பு இப்பொழுது உனக்கு உள்ளது. நீ முயன்று அதில் வெற்றி பெற்று விட்டால் தேவர்களை நாம் அடக்கி நமது அதிகாரத்தையும், ஆட்சியையும் ஈரேழு உலகிலும் நிலைநாட்ட இயலும் என்றார்.

இதை கேட்டு ஆச்சரியம் மற்றும் அதே சமயம் மகிழ்ச்சியும் அடைந்த மாயா, அசுர குலம் தழைக்க நான் என்ன செய்ய வேண்டும்? குருவே... என்று சுக்கிராச்சாரியாரிடம் கேட்டார். அதற்கு அவர் தன் மனதில் இருந்த திட்டத்தை மாயா அறிந்து கொள்ளும் விதமாக விளக்கினார். பின்பு குருநாதரின் ஆணையை ஏற்று மாயா தன் தந்தையான அசுரேந்திரனிடம் தனது குருவின் திட்டத்தை பற்றி கூற அசுரேந்திரரும் அகமகிழ்ந்து தனது மகளை வாழ்த்தி அனுப்பினார்.

தொடரும்..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக