>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 18 அக்டோபர், 2019

    நரகாசுரன் : நாளுக்குநாள் அதிகரிக்கும் பாவங்கள்... பூமாதேவியின் கவலை...

    Image result for நரகாசுரன்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!
    இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக இருக்கக்கூடியவர்கள் மனிதர்கள். இந்த மனிதர்கள் வாழும் இடமான பூமியில் தாங்கள் செய்யும் செயல்களின் காரணமாக அதாவது ஆசை, மோகம், போகம் போன்றவற்றால் பலவிதமான கொடூரமான பாவங்களை செய்து, அவர்களின் பாவ மூட்டைகளை கணக்கற்ற அளவில் பெருக்கி கொண்டுள்ளனர்.
    அவை அனைத்தையும் எம்மால் தாங்க இயலவில்லை என திருமாலிடம், பூமாதேவி எடுத்துரைத்து இந்த நிலைமை மேலும் தொடருமாயின் பூமியில் உள்ள உயிர்கள் யாவும் அழிந்துவிடும். இதிலிருந்து இவர்களை காத்து ரச்சிக்கும் படி வேண்டினாள் பூமாதேவி. அதற்கு பொறுமைக்கொள் பூமாதேவி என்று கூறினார் திருமால்.

    வராக அவதாரம் :

    சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவருக்கும் அவருடைய மனைவியான திதிக்கும் பிறந்தவர்களே இந்த ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபு ஆவார்கள். இவர்களில் இளையவனான ஹிரண்யாக்ஷன் பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் இருந்து வந்தார். அவருடைய தவத்தின் வலிமையால் மூன்று லோகங்களிலும் தீச்சுவாலைகள் ஏற்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் பிரம்ம தேவரை சந்தித்து நிகழ்ந்தவற்றை எடுத்து உரைத்தனர். பின்னர் பிரம்ம தேவர் அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து காப்பதாக கூறி அவர்களை அவர்கள் பணியை செய்ய அனுப்பி வைத்தார். பின்பு ஹிரண்யாக்ஷன் தவம் செய்யும் இடத்தை அடைந்தார்.
    ஹிரண்யாக்ஷன் உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம் வேண்டும் வரத்தைக் கேட்பாயாக... என்று பிரம்ம தேவர் கூறினார். கண்விழித்த ஹிரண்யாக்ஷன் பிரம்ம தேவரை வணங்கி தனக்கு இந்த பிரபஞ்சத்தில் உருவான எந்த உயிரினத்தாலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு அல்லது மரணம் நேரிடக்கூடாது என்றும், தான் மூவுலகத்திற்கும் அதிபதியாக வேண்டும் என்ற இரண்டு வரங்களையும் வேண்டினான். திருமாலை எண்ணி பிரம்ம தேவரும் அவன் வேண்டிய வரத்தை அருளினார்.
    காலங்கள் கடக்க பூமியில் வாழ்பவர்கள் நல்லறங்களை விடுத்து தீயச் செயல்களின் மீது அதிக விருப்பம் கொண்டு ஈடுபட தொடங்கினார்கள். அதாவது தன்னுடைய சுகபோக வாழ்விற்காக மற்றவர்களை துன்புறுத்துதல், முனிவர்கள் செய்யும் யாகத்தை தடுத்தல், பொய்யை உரைத்து பிறரின் பொருட்களை கவர்தல், கொலை - கொள்ளை போன்ற செயல்களை செய்தனர். இது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது.
    இதனால் பூமாதேவியின் கவலையும் அதிகரிக்க தொடங்கின. பின் மும்மூர்த்திகளுக்கும் பூமாதேவியின் இன்னல்கள் புரியவே பூமாதேவியின் இன்னல்களை நீக்க திருமால் மானிடனாக பிறப்பெடுக்க உள்ளார் என்ற செய்தியை மட்டும் பூமாதேவிக்கு தெரிவித்தனர்.

    தொடரும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக