இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிற
அம்மன் கோவில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய
நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும்
அருள்பாலிக்கும் இந்த கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூரில் உள்ளது.
மூலவர்
- மாரியம்மன், பேச்சியம்மன்
அம்மன்
- மாரியம்மன், துர்க்கை
தல
விருட்சம் - வேம்பு, அரசு
தீர்த்தம்
- தெப்பக்குளம்
பழமை
- 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண
பெயர் - மாமண்டூர்
தல வரலாறு :
சுமார்
800 ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரை மன்னன் கூண்பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.
அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோவில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள்
நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு
செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர்.
நாளுக்கு
நாள் அவர்களின் தொந்தரவு அதிகமாக, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின்
கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை
ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை தெற்கு கரையில்
தற்போது கோவில் வீற்றுள்ள பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தல சிறப்பு :
மதுரையின்
காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோவிலில் அம்பாள் மிகுந்த
வரப்பிரசாதியாக அருளுகிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில்
வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு
கேட்டுவிட்டு அதன்பின்பு தான் நடத்துகிறார்கள்.
மதுரையில்
உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழா நடக்கும் முன்பு முதல் பூஜை இவளுக்கே
செய்யப்படுகிறது. கோவிலுடன் சேர்ந்துள்ள இத்தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே
மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையினை உடையது.
இரு அம்பிகை தரிசனம் :
ஜமதக்னி
மகரிஷியின் மனைவி ரேணுகாதேவி மாரியம்மனாக வணங்கப்படுகிறாள். யட்ச குலத்தில்
அவதரித்த மகிஷாசுரன் எனும் அசுரனை அழித்த அம்பிகையாக துர்க்கை மகிஷாசுரமர்த்தினி
என்று வணங்கப்படுகிறாள்.
தீர்த்த விசேஷம் :
இத்தலத்தில்
தரப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும்
தீர்த்தத்தை, மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கிறார்கள். கண்
நோய், அம்மை போன்ற நோய் உள்ளவர்கள் இங்கு அம்பிகையை வணங்கி, தீர்த்தம் வாங்கிச்
செல்கிறார்கள்.
பிராத்தனைகள் :
அம்மை
நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள்,
மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது.
மேலும்,
இத்தலத்தில் வீற்றுள்ள அம்மனை வணங்கிட சகல சௌபாக்கியங்களும் பெருகி, குடும்ப
பிரச்சனைகளும், தொழில் பிரச்சனைகளும் தீரும். பயம், திருமணத்தடை நீங்கி,
குழந்தைப்பேறு கிட்டும் என நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன் :
வேண்டிக்கொண்ட
காரியங்கள் நிறைவேறிட, அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் மாவிளக்குகள்
எடுத்து, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. குழந்தைகளின் நோய்கள் தீர,
குழந்தை தத்துக்கொடுத்து வாங்கி, மண்சிலைகள் கொடுத்து, கரும்புத்தொட்டில்கள்
கட்டப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மேலும்
கிடா வெட்டிப்படைத்தல், அங்கப்பிரதட்சிணம் செய்தல், முடி இறக்குதல், அலகு
குத்துதல், உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்துதல் என பக்தர்கள் தத்தம்
நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக