🔆 திதி : அதிகாலை 01.59 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
🔆 நட்சத்திரம் : அதிகாலை 04.18 வரை அஸ்தம் பின்பு சித்திரை
🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 04.18 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 அதிகாலை 04.18 வரை சதயம் பின்பு பூரட்டாதி
பண்டிகை
🌷 கீழ் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கெருடாழ்வார்க்கு திருமஞ்சன சேவை.
🌷 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
வழிபாடு
🙏 துர்க்கையை வழிபட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 சங்கீதம் பாடுவதற்கு நல்ல நாள்.
🌟 மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்ற நாள்.
🌟 சித்திரம் எழுதுவதற்கு உகந்த நாள்.
🌟 குதிரை வாங்குவதற்கு சிறந்த நாள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 09.56 AM முதல் 11.40 AM வரை
ரிஷப லக்னம் 11.41 PM முதல் 01.43 PM வரை
மிதுன லக்னம் 01.44 PM முதல் 03.55 PM வரை
கடக லக்னம் 03.56 PM முதல் 06.02 PM வரை
சிம்ம லக்னம் 06.03 PM முதல் 08.04 PM வரை
கன்னி லக்னம் 08.05 PM முதல் 10.05 PM வரை
துலாம் லக்னம் 10.06 PM முதல் 12.10 AM வரை
விருச்சிக லக்னம் 12.11 AM முதல் 02.21 AM வரை
தனுசு லக்னம் 02.22 AM முதல் 04.29 AM வரை
மகர லக்னம் 04.30 AM முதல் 06.23 AM வரை
கும்ப லக்னம் 06.24 AM முதல் 08.10 AM வரை
மீன லக்னம் 08.11 AM முதல் 09.51 AM வரை
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
மேஷம்
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். எந்த செயலிலும் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சிந்தனை போக்கில் மாற்றம் காணப்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
அஸ்வினி : உற்சாகமான நாள்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தம்பதியர்களுக்குள் புரிதல் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : அனுபவம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
கடகம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
பொருளாதார நெருக்கடிகள் குறையும். கடன் பிரச்சனைகள் சில முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறுதூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : நெருக்கடிகள் குறையும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
கன்னி
புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : தாமதம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
மகிழ்ச்சியான சிந்தனைகள் மூலம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய பயணங்கள் கைகூடும். இணைய வர்த்தக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவர் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தயக்க உணர்வு இல்லாமல் செயல்படுவது நல்லது. சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : மாற்றமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
கேட்டை : மாற்றமான நாள்.
---------------------------------------
தனுசு
தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிற்சங்க பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். கலைத்துறையினருக்கு திறமைக்கு ஏற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அபிவிருத்தியான நாள்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : சாதகமான நாள்.
---------------------------------------
மகரம்
கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு மேம்படும். கூட்டாளிகளுடன் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சி சாதகமாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
--------------------------------------
மீனம்
முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல் மேம்படும்.
ரேவதி : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக