Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 15 பிப்ரவரி, 2025

5 வகையான தோசை


1-பச்சை மொச்சை தோசை

தேவையானவை

பச்சை மொச்சை பருப்பு - 2 கப், 
பச்சரிசி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து தோசைகளாக வார்க்கவும். சக்தியும் சுவையும் நிரம்பிய தோசை இது.

2-தேங்காய் தோசை

தேவையானவை: 

புழுங்கலரிசி - ஒரு கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இந்த தோசையை சுடச்சுட சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான சுவையே. விருப்பப்பட்டவர்கள் சிறிது சர்க்கரையை மாவில் சேர்த்து வார்க்கலாம்.


3-வெண்டைக்காய் தோசை


தேவையானவை:

பச்சரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழகொழப்பாக இருக்கும். ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்கவரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.

4-கம்பு தோசை

தேவையானவை:

கம்பு - 2 கப்,
புழுங்கலரிசி - அரை கப்
பச்சரிசி - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
யஎண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கம்பை தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி இரண்டையும் சேர்த்து ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கம்பு, அரிசி, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் கொத்துமல்லியை கலந்து தோசைகளாக வார்க்கவும்.


5-பூசணி தோசை


தேவையானவை:
 
பச்சரிசி - 2 கப்

வெள்ளைப் பூசணியின் சதைப் பகுதி - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பூசணிக்காயின் உட்புறம் உள்ள பகுதியில் விதைகளை எடுத்து விட்டு, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

பிறகு அரிசி, பருப்பு, பூசணித் துண்டுகள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். 

பிறகு தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு வேகவைக்கவும். இந்த தோசை வெயில் காலத்துக்கு மிகவும் சிறந்தது. 

உளுந்து விலை அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில், இதுபோன்ற தோசைகளை செய்து அசத்தலாம். இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை துவையல் சூப்பர் ஜோடி.

பச்சை துவையல்:

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி - கொட்டைப் பாக்களவு,
காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பெருங்காயம், புளி, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக