Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 செப்டம்பர், 2021

யாரும் ஏற முடியாத மரம்... கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------
காமெடி கலாட்டா...!!
-------------------------------------------------
கணவன் : எத்தனை தடவை திரும்ப திரும்ப சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
மனைவி : திரும்பி சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
கணவன் : 😳😳
-------------------------------------------------
ஷாலினி : ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிகிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்கேன்.
மாலினி : அதென்ன போலி வாழ்க்கை?
ஷாலினி : அவர் சொல்ற ஜோக்குக்கெல்லாம் போலித்தனாம சிரிச்சிக்கிட்டிருக்கேன்!
மாலினி : 😂😂
-------------------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------------------
1. குண்டு முழி ராஜாவுக்குக் குடல் எல்லாம் பற்கள். அது என்ன?

2. கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?

3. யாரும் ஏற முடியாத மரம்... கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?

4. விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது. அது என்ன?

5. பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும். அது என்ன?

விடைகள் :

1. மாதுளை

2. கரும்பு

3. வாழை

4. தலையாட்டி பொம்மை

5. முருங்கை

5 முக ருத்ராட்சம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் புத்திக்கூர்மையையும் பொறுமை, பக்குவம் மற்றும் அமைதியான மன நிலையையும் பெற்றுத்தரும்.
-------------------------------------------------
அட அப்படியா?
-------------------------------------------------
🐦மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்துமாம்.

🐦ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியுமாம்.

🐦கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்குமாம்.

🦎பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்குமாம்.

🐦புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்ததாம்.

🐦குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்குமாம்.

🐻கங்காருவும் கைகளால் சண்டை போடும்.

🐘யானையும் குறட்டை விட்டுத் தூங்கும்.

🦍கொரில்லாவிற்கு 32 பற்கள் உண்டு.

🐧பெங்குயின் பறவை நடந்து செல்லும்.

🐒குரங்கு பேன் பார்க்கும்.

🐦குக்குபெர்ரா பறவை சிரிக்கும்.

🐒உகாரி குரங்கு கைகளைக் கட்டிக்கொண்டு நடக்கும்.

🦁சிங்கம் குடும்பம் குடும்பமாய் சேர்ந்து வாழும்.

🐦நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

🐝வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

🐦நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக