இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
எனக்கும்
எனது நண்பனுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டு
சில நாட்கள் ஆகின்றன. நான்
அதை மறந்தும் விட்டேன். ஆனால் என் நண்பனோ
அதை எமது சக பணியாளர்
சர்மிலனிடம் கூறிக்கொண்டிருந்தான்.
அப்போது நான் அவனிடம் கேட்டேன்.
"எனக்கும் உனக்கும் தான் பிரச்சினை, இதை ஏன் நீ சர்மிலனிடம் கூறிக்கொண்டிருக்கின்றாய்?"
நண்பன் இவ்வாறு பதிலளித்தான். "சர்மிலன் நமது இருவருக்குமே நண்பன். அதனால் தான் அவனிடம் கூறினேன். தவிர நான் என் காதலியிடமோ, வேறு எந்தக் கழுதையிடமோ கூட கூறவில்லை." என்றான் சற்றுக் கடுகடுப்பாக.
நான் இவ்வாறு விளக்கமளித்தேன்.
"இதோ பார்! இது நீயும் நானும் மட்டுமே சம்பந்தப்பட்டப் பிரச்சினை. இது வேறு எந்த மூன்றாம் நபருக்கும் தேவையற்ற விடயம். சர்மிலன் நமது இருவருக்குமே நண்பர் என்றாலும், அவரும் இப்பிரச்சினையில் மூன்றாம் நபர்தான். அதேப்போன்றே உன் காதலியும், கழுதையும் கூட மூன்றாம் நபர்கள் தான்."
அப்படியானால் முதலாம் நபர் யார்?
நான் = முதலாம் நபர்.
நீ = இரண்டாம் நபர்.
சர்மிலன், காதலி, கழுதை = மூன்றாம் நபர்.
இப்பொழுது விளங்குகின்றதா? இது ஒரு உதாரணக் கதை மட்டுமேயாகும்.
SINGULAR - ஒருமை
I – நான் (First Person Singular – முதலாம் நபர்)
You – நீ (Second Person Singular – இரண்டாம் நபர்)
He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)
PLURAL - பன்மை
We – நாம்/ நாங்கள் (First Person Plural – முதலாம் நபர் பன்மை)
You – நீங்கள் (Second Person Plural – இரண்டாம் நபர் பன்மை)
They – அவர்கள் (Third Person Plural மூன்றாம் நபர் பன்மை)
மின்னஞ்சல் ஊடாக கணேசன் என்பவர் “Third Person Singular, Second Person Singular” என்று எழுதியிருப்பது விளங்கவில்லை என வினவியிருந்தார். அவருக்கான பதிலாகவே இப்பாடம் வழங்கப்பட்டுள்ளது. இப்பாடம் கணேசனுக்கு மட்டுமன்றி, அதே கேள்வியுடைய எல்லோருக்கும் விளங்கக்கூடியாதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
குறிப்பு:

- First Person = தன்மை
- Second Person = முன்னிலை
- Third Person = படர்க்கை
தமிழ் இலக்கண வழக்கின்
படி "தன்மை", "முன்னிலை", "படர்க்கை" என குறிப்பதே வழக்கு.
இருப்பினும் ஆங்கிலம் கற்பிப்போர் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையிலேயே
மேலுள்ளவாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்க.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக