ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் RailOne செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இனி RailOne செயலி மூலம் பெறப்படும் Season Ticket-ஐ PDF வடிவில் Download செய்து மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
இதற்கு முன்பு RailOne செயலியில் Season Ticket எடுத்த பிறகு, அதை நேரடியாக Download செய்வது அல்லது Screenshot எடுத்துக்கொள்வது போன்ற வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதனால் பயணிகள் தங்களது Season Ticket-ஐ பார்க்க செயலியைத் திறக்க வேண்டியிருந்தது.
இனி Season Ticket-ஐ PDF-ஆக Download செய்யலாம்
தற்போதைய RailOne செயலியின் புதிய பதிப்பில், பயனர்கள் தங்களது Season Ticket-ஐ PDF வடிவில் Download செய்து வைத்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் Season Ticket-ஐ மொபைலில் தனியாக PDF கோப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் அந்த PDF-ஐ எளிதாக திறந்து டிக்கெட் விவரங்களைப் பார்க்க முடியும்.
பயணிகளுக்கு பயனுள்ள வசதி
இந்த புதிய வசதி தினசரி ரயிலில் பயணம் செய்யும் Season Ticket பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக Internet connection இல்லாத நேரங்களிலும், முன்கூட்டியே Download செய்து வைத்துள்ள PDF மூலம் டிக்கெட் விவரங்களைப் பார்க்க முடியும்.
இதன் மூலம் ஒவ்வொரு முறையும் RailOne செயலியைத் திறந்து Season Ticket-ஐ தேடும் தேவையும் குறையும்.
RailOne செயலியில் Season Ticket-ஐ PDF-ஆக Download செய்யும் வசதி, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் முக்கியமான புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.