இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கன்னியாகுமரியிலிருந்து 60கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 34கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அருவிதான் திற்பரப்பு அருவி.
சிறப்புகள் :
இயற்கை அன்னை தந்த அற்புதமான படைப்பில் இதுவும் ஒன்று. உயரமான இடத்திலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை பார்க்கும்போதே மனதில் புதுவிதமான மகிழ்ச்சி உண்டாகும். கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது.
ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தரும் திற்பரப்பு, அழகும் புனிதமும் ஒன்று கூடிய இடம். இங்குள்ள புனித அருவியும், பச்சை மலையும், கோதையாறும் நம்மை வசீகரித்துக் கொள்ளும் அழகின் தொட்டில்கள், பளிச்சென மின்னி தெறித்து விழும் இந்த அருவி பார்வைக்கு விருந்தளிக்கிறது.
தரையில் கொட்டும் அருவி தலையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூட்டும் அனுபவம் தரும்.
இந்த அருவி கோதை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும், பூங்காவும் உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்கள் படகு சவாரி செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் உள்ளது. ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீர்வீழ்ச்சிக்கும், நீர்த்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவர் கோவில் (சிவன் கோவில்) உள்ளது.
இது பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமாகும். இந்தக் கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இங்கு கோதை ஆறு, அருவி, சிவன் கோவில் மூன்றையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவ்வருவியில் குளித்து மகிழலாம்.
எப்படி செல்வது?
கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
ரயில் வழியாக :
கன்னியாகுமாரி ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அருவியில் நீர் இருக்கும் சமயத்தில் செல்வது சிறந்தது.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
பூங்கா.
கோவில்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
விவேகானந்தர் நினைவு மண்டபம்.
திருவள்ளுவர் சிலை.
அழகுமிக்க கடற்கரைகள்.
மாத்தூர் தொட்டிப்பாலம்.
சிதறால் ஜைன மலை குகைக்கோவில்.
பத்மநாபபுரம் அரண்மனை.
மகாத்மா காந்தி மண்டபம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக