இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த உலகத்தில் வியக்கத்தக்க விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க இருப்பது கற்சிலைகளாக மாறும் பறவைகள்...உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக மிக அவசியமான ஒன்று... ஆனால் அத்தண்ணீரே உயிரை கொல்வதாக இருக்கும் ஒரு ஏரியை பற்றி தெரிந்து கொள்வோம்...
தான்சானியா நாட்டில் உள்ள நாட்ரான் என்னும் உப்பு ஏரிதான் பறவைகளை கற்சிலைகளாக மாற்றுகிறது.
பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த அபூர்வ விஷயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான்.
இங்கு தண்ணீர் குடிக்கும் பறவைகளும், பிற உயிர்களும் அந்த நீரில் உள்ள ரசாயனத்தினால் இறந்து கற்சிலைகளாகி விடுகின்றன.
புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான நிக்பிரேன் 2010ஆம் ஆண்டு தான்சானியா நாட்டின் வட பகுதியில் ஒரு உப்பு நீர் ஏரியை பார்த்துள்ளார்.
அந்த உப்பு நீர் ஏரியில் ஒரு விநோதமான சம்பவம் அதாவது, தாகத்திற்காக தண்ணீர் அருந்த வரும் பறவைகள் கற்சிலைகளாக மாறுவதை கண்டுள்ளார்.
இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த நிக்பிரேன் அந்த ஏரியில் கற்சிலைகளாக மாறிய பறவைகளையும் புகைப்படம் எடுத்துள்ளார். அப்புகைப்படம் அவருக்கு 2012ஆம் ஆண்டு சிறந்த புகைப்படம் எடுப்பவருக்கான விருதை வழங்கியது.
பறவைகள் இறப்பது ஏன்?
அந்த உப்பு நீர் ஏரியில் கால்சியம் கார்பனேட், நைட்ரோ கார்பன் மட்டுமில்லாமல் பல வகையான வேதிப்பொருட்கள் கலந்துள்ளது.
மேலும், ஏரி நீரின் pரி அளவு 10.5 ஆகும். அதிக அளவு pரி கொண்ட நீரை குடிக்கும் அளவிற்கு மாற்றம் கொண்ட உயிரினங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் குடிப்பதால் அவை இறந்து விடுகின்றன. நாளடைவில் கால்சியம் கார்பனேட்டின் காரணமாக கற்சிலைகளாக மாறிவிடுகின்றன.
மேலும், இந்த உப்பு நீர் ஏரியின் தன்மை பற்றி தெரிந்த பறவைகள் இவ்வேரிக்கு வருவதில்லை. ஆனால் இதைப்பற்றி தெரியாத பறவைகள் இன்னமும் இந்த ஏரிக்கு வந்து தன் உயிரை விடுகின்றன.
அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மையாகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக