இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே குஷிதான். தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் மொபைல்போனில் விளையாட பழகிக்கொண்டனர். அதனால் வெளியில் விளையாடும் சுவாரஸ்மான விளையாட்டுக்களை பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை.உடல் ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் இருக்க மொபைல்போன் தேவையில்லை, கிராமத்து விளையாட்டுக்களே சிறந்தது என்பதை சொல்லிக் கொடுப்போம்.
குரங்கு விளையாட்டு !!
குரங்கு விளையாட்டு சிறுவர், சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.
எப்படி விளையாடுவது?
முதலில் உள்வட்டம் ஒன்று, வெளிவட்டம் ஒன்று போட்டுக்கொள்ள வேண்டும்.
அதன்பின் குரங்காக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆட்டத்தில் அவர்தான் குரங்காக இருப்பார்.
அவரை நடுவில் உள்ள உள்வட்டத்துக்குள் உட்கார வைப்பர். மற்றவர்கள் வெளிவட்டக் கோட்டில் உட்காருவர்.
மற்றவர்கள்குரங்காக இருப்பவர்குரங்கே குரங்கே மணி எத்தனைஒன்றுகுரங்கே குரங்கே மணி எத்தனைஇரண்டுகுரங்கே குரங்கே மணி எத்தனை
.
.
.
.
மூன்று
.
.
.
.
குரங்கே குரங்கே மணி எத்தனைபத்து
பத்து என்றதும் எல்லோரும் எழுந்து ஓடுவர். ஓடுபவர்களை குரங்கு பிடிக்க வேண்டும். பிடிபட்டவர் குரங்காக்கப்படுவார். ஓடுபவர் குரங்கு இருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டால் அவரை தொடக்கூடாது.
உந்தி பறத்தல் !!
உந்தி பறத்தல் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.
எப்படி விளையாடுவது?
இரண்டு சிறுவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டும், கால்களால் ஒருவரை ஒருவர் உதைந்துகொண்டும் சுற்றும் விளையாட்டாகும்.
அப்படி கைகளை பிடிக்கும்போது வலக்கையை வலக்கையாலும், இடக்கையை இடக்கையாலும் எதிரெதிர் நின்று பிடித்துக்கொள்வர். அப்போது கைகள் பின்னலிட்டது போல் இருக்கும்.
அதன்பின் வலப்புறமாக சிறிது நேரமும், இடப்புறமாக சிறிது நேரமும் சுழல்வர். இது ஒரு பொழுதுப்போக்கு விளையாட்டாகும்.
வண்டி விளையாட்டு !!
தென்னை மட்டைகளையும், வாழை மட்டைகளையும் பயன்படுத்தி அதன்மேல் சிறுவர்களை அமரச்செய்து இழுத்துச்சென்று விளையாடுவர்.
சைக்கிள் ரிம்களை குச்சி ஒன்றால் உந்தி உருட்டிச் சென்று விளையாடுவர்.
சைக்கிள் மற்றும் வண்டி போன்றவற்றின் டயர்களை கோலால் தட்டி உருட்டி சென்று விளையாடுவர்.
இது குழந்தைகளுக்கு குஷியான மற்றும் பொழுதுப்போக்கான விளையாட்டாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக