இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இவற்றை எல்லாம் கடந்து ஆச்சரியப்பட வைக்கும் ஒரு வித்தியாசமான குகை கோவிலை பற்றி பார்ப்போம்....
பொதுவாக இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை உலகுக்கு உண்மையாக்கிய அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இன்றளவும் இக்கூற்றை உண்மையாக்கும் வகையில், பல இடங்களில் கோவில் கொண்ட நரசிம்மர், 300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீருக்கு இடையில் கோவில் கொண்டுள்ளார்.
இந்த ஜர்னி நரசிம்மர் குகை கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது. இக்கோவிலில் கோடைக் காலத்திலும் கூட மார்பளவு தண்ணீர் காணப்படும். ஒருபோதும் வறண்டு போவதில்லை.
இங்குள்ள நரசிம்மரைத் தரிசிக்க வேண்டுமெனில் குகைக்குள் மார்பளவு தண்ணீரில் நடந்து செல்லவேண்டும்.
இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
குகையின் முடிவில் சிவலிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார்.
அதேசமயம் புராணத்தில் பக்தன் பிரகலாதனின் பக்தியை நிரூபிக்க வந்த நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர், ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ய வந்தார். அந்த அசுரனோ ஒரு சிவ பக்தன் என்பதால், இந்த குகைக்குள் தான் தவம் செய்து சிவனை வழிபட்டார். தேடி வந்து ஜலசூரனை வதம் செய்தார்.
பின்னர், இங்குள்ள சிவ பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்யும் ஜலமாக (தண்ணீராக) மாறி ஊற்றெடுத்துள்ளார். மேலும், அந்த அசுரனின் வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அங்கேயே தங்கி விட்டார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக