இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் அசோகன் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரிடம் பல பேர் அடிமைகளாக வேலைசெய்து கொண்டிருந்தனர். அந்த அடிமைகளில் மாது என்பவன் மிகவும் அப்பாவியானவன். இவன் யாரிடமும் சண்டையும் போடமாட்டான்.
ஒரு சமயம், பணக்காரர், வியாபார விஷயமாக நெடுந்தூரம் செல்ல வேண்டி இருந்தது. அதனால், வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லும் மூட்டைகளை, அடிமைகள்தான் சுமந்து செல்ல வேண்டும். அதனால், பணக்காரர் தன் அடிமைகளில், 20 பேரை தேர்ந்தெடுத்தார்.
இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மூட்டையை எடுத்துச்செல்ல வேண்டும். ஆனால், மூட்டையை வழியில் யாரும் மாற்றிக் கொள்ளக்கூடாது என்று பணக்காரர் கட்டளையிட்டார். எல்லோரும் அவரவர்களுடைய மூட்டையை எடுத்ததும், மீதம் இருந்த ஒரு மூட்டையை மாது எடுத்துக் கொண்டார்.
பெரிய மூட்டையை அவர்கள் விட்டு வைத்தாலும் மௌனமாக அதைத் தூக்கித் தலையில் வைத்தார். அதைக் கண்ட மற்ற அடிமைகள் உன்னைப் போல் அடி முட்டாளைப் பார்த்ததே இல்லை. மிகப்பெரிய மூட்டையை எடுத்திருக்கிறாயே என்று கேலியாக நகைத்தனர். ஆனால் மாதுவோ, இந்த மூட்டையையும் யாரேனும் ஒருவர் தூக்கித்தானே ஆக வேண்டும்? இந்த மூட்டைக்கு ஒரு மாய சக்தி உண்டு. இதை முதலிலேயே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல் போனோமே, என்று நீங்கள் பின்னால் வருத்தப்பட்டாலும் படலாம் என்று கூறினார்.
இதைக் கேட்ட மற்ற 19 அடிமைகளும் சிரித்தனர். பயணத்தின் போது மாதுவின் பெரிய மூட்டையில் ஏற்படும் வினோதமான மாறுதலை மற்ற அடிமைகள் கவனித்தனர். அந்தப் பெரிய மூட்டை நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகிறது! உண்மையிலேயே அது மாய சக்தி வாய்ந்தது தானோ? என்று எண்ணினர்.
உடல் வலிமையிலும், உருவத்திலும் பெரியவர்களாக இருந்த சோம்பேறி அடிமைகள் அப்போதுதான் தாங்கள் எத்தனை பெரிய முட்டாள்கள் என்பதை புரிந்து கொண்டனர். இளைத்த உடலைக் கொண்ட மாது, அறிவால் எப்படி உயர்ந்தவன் என்பதையும் அவர்கள் அறிந்தனர்.
பிறகு சரி, அத்தனை பெரிய மூட்டை உருமாறியது எப்படி? என்று மாதுவிடம் கேட்டனர். அந்தப் பெரிய மூட்டையில் நீண்ட நெடுநாள் பயணத்திற்கு, அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்கள் இருந்தது.
ஒவ்வொரு உணவு வேளையிலும், அந்த மூட்டையிலிருந்துதான் உணவுப்பொருள் எடுத்து எல்லோருக்கும் வினியோகிக்கப்பட்டது. ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும், மூட்டையின் கனம் குறையத்தானே செய்யும்? என்றான் மாது.
அப்பாவி அடிமை மாது, தன்னுடைய பொறுமையிலும், புத்திசாலித்தனத்திலும் எல்லோருடைய அன்பையும் பெற்றான். பிறகு மாதுவை அந்த பணக்காரர் விடுதலை செய்தார். அவனுக்குச் சுதந்திரம் கிடைத்ததில், மற்ற அடிமைகளுக்கு ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியும், அவன் பிரிந்து போகிறானே என்றும் வேதனைப்பட்டனர். ஏனென்றால், வேலை செய்யும் போதும், பயணம் செய்யும் போதும் யாருக்கும் அலுப்போ, களைப்போ ஏற்படாமல் இருக்க, அழகழகான கதைகளை சொல்லி எல்லோரையும் மாது மகிழ்விப்பான்.
இப்போது மாதுவிற்கு, எப்படிப் பிழைப்பது? என்று தெரியவில்லை. வேலை செய்வதைத் தவிர அவனுக்குத் தெரிந்த ஒரே கலை, கதை சொல்வதுதான். ஆகவே, மாது கடை வீதிகளிலும், நான்கு சாலைகள் கூடுமிடங்களிலும், சந்தைகளிலும் நின்று கதைகள் கூறித் தன் உணவுக்கு வழி தேடினான்.
அவன் கூறும் கதைகளின் புகழ், அந்த நாட்டின் மூலை முடுக்குகளியெல்லாம் பரவியது. அதனால், அந்நாட்டு மன்னர் அவனை வரவழைத்து, மாதுவிற்கு அவையில் ஒரு பதவியைக் கொடுத்தார்.
என்ன பதவி தெரியுமா? தினமும் அவர் முன்னிலையில், மாது கதைகள் சொல்ல வேண்டும்!. இப்போது அந்தச் சின்ன அடிமையின் வறுமை நீங்கியது. இந்த நேரத்தில், நடுங்கும் குளிரில் அடைத்திருக்கும் வீட்டுக் கதவுகளின் அடியில் முடங்கிக் கொண்டிருந்த துயர் மிகுந்த இரவுகளை நினைத்துக் கொண்டான். அன்று, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதனால்தான் இன்று மன்னரின் அவையில், கதை சொல்லும் வாய்ப்பு, தனக்குக் கிடைத்திருக்கிறது என்று நினைத்து மாது மகிழ்ந்தான்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக